Enter your Email Address to subscribe to our newsletters

நாகப்பட்டினம், 11 ஜனவரி (H.S.)
நாகப்பட்டினம் மாவட்டம் அக்கரைப்பேட்டை ஊராட்சி கல்லார் கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இங்குள்ளவர்கள் 100 க்கும்
மேற்பட்ட பைபர் படகுகள் மூலம் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். இங்கு மீன்பிடியே பிராதன தொழிலாக இருப்பதால் கடற்கரையில் பைபர் படகுகளை நிறுத்தி
சீர் செய்தல், வலை பின்னுதல் ஆகியவற்றை செய்து வருகின்றனர்.
மேலும் கடற்கரையில் இருந்து சிறிது தூத்தில் வீடுகள் உள்ளது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக கல்லார்
கிராமத்தில் கடல் சீற்றம் காரணமாக கடலரிப்பு ஏற்பட்டுள்ளது கல்லார்
கிராமத்தில் கடற்கரையில் கொட்டப்பட்டுள்ள தடுப்பு கற்களில் இருந்து 50 அடி
தூரம் தள்ளி கடல் இருந்தது. ஆனால் தற்பொழுது கொட்டப்பட்டுள்ள தடுப்பு கற்களை தாண்டி 100 அடி மேல் கடல் நீர் வந்துள்ளது. அதாவது 150 அடிக்கு கடல் நீர் உள்ளே புகுந்துள்ளது.
இப்படி நாளுக்கு நாள் கடல் நீர் உள்புகுவதால் கடல் நீர்
குடியிருப்புக்குள் புகும் அபாயம் உள்ளது. மேலும் கரைகளில் நிறுத்தி
வைக்கப்பட்டுள்ள படகுகள் ஒன்றன் மீது ஒன்றன் மோதி சேதம் அடைவதாகவும் மேலும்
கடல் அலைகள் வலைகளை இழுத்துச் சென்று விடுவதாகவும் மீனவர்கள் வேதனை
தெரிவிக்கின்றனர்.
இதனால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் எனவே தற்பொழுது கடற்கரையை ஒட்டி கொட்டப்பட்டுள்ள கற்களில் இருந்து 500 மீட்டர்
தூரத்திற்கு கற்களை கொட்டி கல்லார் கிராமத்தை கடல் நீர் உட் புகுவதை தடுக்க
நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவ கிராம மக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam