அருணாச்சல பிரதேசத்தின் காமெங் பகுதியில் இன்று காலை இரண்டு முறை நிலநடுக்கம் - தேசிய நில அதிர்வு மையம் தகவல்
இட்டாநகர், 11 ஜனவரி (ஹி.ச.) அருணாச்சல பிரதேசத்தின் காமெங் பகுதியில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. காலை 5.34 மணியளவில் (இந்திய நேரப்படி) ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 3 ஆக பதிவாகி உள்ளது என தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
அருணாச்சல பிரதேசத்தின் காமெங் பகுதியில் இன்று காலை இரண்டு முறை நிலநடுக்கம் - தேசிய நில அதிர்வு மையம் தகவல்


இட்டாநகர், 11 ஜனவரி (ஹி.ச.)

அருணாச்சல பிரதேசத்தின் காமெங் பகுதியில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.

காலை 5.34 மணியளவில் (இந்திய நேரப்படி) ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 3 ஆக பதிவாகி உள்ளது என தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

அருணாச்சல பிரதேசத்தில் 10 கிலோமீட்டர் ஆழத்தை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் 27.53 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 92.85 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது.

இந்த நிலையில், அருணாச்சல பிரதேசத்தின் கிழக்கு காமெங் பகுதியில் காலை 5.35 மணியளவில் (ஒரு நிமிட இடைவேளியில்) ரிக்டரில் 3.1 அளவில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது.

நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை.

Hindusthan Samachar / JANAKI RAM