சென்னையில் 24 உதவி கமிஷனர்கள் உள்பட தமிழகம் முழுவதும் 88 துணை போலீஸ் சூப்பிரண்டுக்கள் இடமாற்றம்
சென்னை, 11 ஜனவரி (ஹி.ச) சென்னை உட்பட தமிழகம் முழுவதும் 24 உதவி கமிஷனர்கள் 88 துணை போலீஸ் சூப்பிரண்டுக்கள் இடமாற்றம்செய்து டிஜிபி வெங்கட்ராமன் உத்தரவிட்டுள்ளார். இன்னும் சில மாதங்களில் தேர்தல் வருவதை முன்னிட்டு 88 டி.எஸ்.பி.,கள்/ உதவி ஆணையர்களை
Pol


Le


சென்னை, 11 ஜனவரி (ஹி.ச)

சென்னை உட்பட தமிழகம் முழுவதும் 24 உதவி கமிஷனர்கள் 88 துணை போலீஸ் சூப்பிரண்டுக்கள் இடமாற்றம்செய்து டிஜிபி வெங்கட்ராமன் உத்தரவிட்டுள்ளார்.

இன்னும் சில மாதங்களில் தேர்தல் வருவதை முன்னிட்டு 88 டி.எஸ்.பி.,கள்/ உதவி ஆணையர்களை பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

சென்னை, தாம்பரம், ஆவடி, திருச்சி, மதுரை, கோயமுத்தூர், திருநெல்வேலி உள்ளிட்ட பல்வேறு காவல் ஆணையரங்கங்களில் பணிபுரிந்து வரும் உதவி ஆணையர்கள் உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பணிபுரிந்து வரும் டி.எஸ்.பி.,கள் என மொத்தம் 88 நபர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

தேர்தல் நெருங்க நெருங்க காவலர்கள் முதல் காவல்துறை உயர் அதிகாரிகள் வரை பணியிட மாற்றம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக காவல்துறை உயர் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

Hindusthan Samachar / P YUVARAJ