Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 11 ஜனவரி (ஹி.ச.)
சென்னை போரூர் முதல் வடபழனி வரையிலான மெட்ரோ ரயில் வழித்தடத்தில் இன்று (ஜனவரி 11) சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நிறைவுபெற்றது. இந்த வழித்தடத்தில் ஏற்கெனவே ரயில் என்ஜின் மூலம் சோதனை நடத்தப்பட்ட நிலையில், அதன் தொடர்ச்சியாக இன்று முழு மெட்ரோ ரயிலையும் இயக்கி சோதனை மேற்கொள்ளப்பட்டது.
மேலும், சோதனை ஓட்டம் உள்ளிட்ட தொழில்நுட்ப அம்சங்களை உறுதிப்படுத்தும் வகையில் நடைபெற்றது.
சென்னையில் முதன்முறையாக போரூர் - ஆழ்திருநகர் இடையே முதல் டபுள் டக்கர் மெட்ரோ வழித்தடம் அமைந்துள்ளது. இதேபோன்று மெட்ரோ ரயில் பாதையில் முதன்முறையாக 5 டிராக்குகளும் இந்த வழித்தடத்தில் அமைக்கப்பட்டுள்ளன.
போரூர் முதல் வடபழனி வரையிலான டவுன் லைன் வழித்தடத்தில் 5 முதல் 10 கி.மீ. வேகத்தில் சோதனை ஓட்டம் நடைபெற்றது.
பூவிருந்தவல்லி - கலங்கரை விளக்கம் இடையிலான மெட்ரோ ரயில் 2வது கட்ட 4வது வழித்தடத்தில் சோதனை ஓட்டம் நடைபெற்றது. டவுன் லைனில் சோதனை ஓட்டம் நடைபெற்ற நிலையில் அப் லைனில் 3 நாட்களுக்கு பிறகு சோதனை ஓட்டம் நடைபெறவுள்ளது.
போரூர் சந்திப்பு, காரம்பாக்கம், ஆலப்பாக்கம், வளசரவாக்கம், ஆழ்வார்திருநகர் ஆகிய 5 மெட்ரோ நிலையங்கள் உள்ளன. பூவிருந்தவல்லி - போரூர் வரை 10 கி.மீ. தூரத்துக்கு ஏற்கனவே சோதனை ஓட்டம் நிறைவடைந்துள்ளது.
ஜனவரி இறுதிக்குள் போரூர் - வடபழனி வழித்தடத்தில் 35 கி.மீ. வேகத்தில் சோதனை ஓட்டம் நடைபெறும். போரூர் - வடபழனி வரையிலான வழித்தடத்தில் மணிக்கு 35 - 40 கி.மீ. வேகத்தில் மெட்ரோ ரயில் இயக்கப்படும்.
வடபழனி - பூவிருந்தவல்லி இடையிலான மெட்ரோ ரயில் பணிகள் ஜூனில் முழுமையாக நிறைவடையும்.
25 நிமிடத்தில் பூவிருந்தவல்லியில் இருந்து வடபழனி வந்தடையலாம்.
போரூர் - வடபழனி இடையே பிப்ரவரி 2வது வாரத்துக்குள் ரயில் சேவை தொடங்கும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Hindusthan Samachar / vidya.b