பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னையின் ஒரு சில பகுதிகளுக்கு நாளை மின்தடை அறிவிப்பு
சென்னை, 11 ஜனவரி (ஹி.ச) சென்னையில் நாளை (12.01.2026) காலை 09:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநி
பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னையின் ஒரு சில பகுதிகளுக்கு நாளை மின்தடை அறிவிப்பு


சென்னை, 11 ஜனவரி (ஹி.ச)

சென்னையில் நாளை (12.01.2026) காலை 09:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என தமிழக மின் பகிர்மான கழகம் அறிவித்துள்ளது.

மின்தடை ஏற்படும் இடங்கள் பின்வருமாறு :

அம்பத்தூர்: ரெட்ஹில்ஸ், கிழ்கொண்டையூர், அரக்கம்பாக்கம், கர்லபாக்கம், தாமரைபாக்கம், கதவூர், வேளச்சேரி, பாண்டேஸ்வரம், கரனை, புதுகுப்பம், வாணியன்சத்திரம், ஆயிலச்சேரி, குருவாயில், பூச்சியத்துபேடு. கோடுவல்லி,

பால்பண்ணை, வேல் டெக் சாலை, கொள்ளுமேடு சாலை, புதுநகர், பாலாஜி கார்டன், ஆரன் உல்லாச சிட்டி, சோத்துப்பாக்கம் சாலை, நியூ ஸ்டார் சிட்டி, கள்ளிகுப்பம், அழிஞ்சிவாக்கம், வடகரை, மகாராஜா நகர், எம்.ஹெச். சாலை, விஷ்ணு நகர், திரு.வி.க நகர், டி.என்.கே நகர், அன்பு நகர், விளாங்காடு பாக்கம்,மல்லிமா நகர்,டி.எச்.நெடுஞ்சாலை, ஆலமரம், காந்தி நகர், ஆசிதம்பி தெரு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்

இவ்வாறு தமிழக மின் பகிர்மான கழகம் அறிவித்துள்ளது.

Hindusthan Samachar / vidya.b