Enter your Email Address to subscribe to our newsletters

தமிழ்நாடு, 11 ஜனவரி (ஹி.ச.)
அரசியல் நிகழ்வுகள் குறித்து கருத்துகளாகவும் கண்டனமாகவும் வீடியோவை வெளியிட்டு வரக்கூடிய முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் இன்று வெளியிட்டு இருக்கக்கூடிய வீடியோவில் கூறியிருப்பதாவது :
தமிழகத்தில் வரலாறு காணாத அளவில் கடன் சுமை அதிகரித்து உள்ளது. டெல்லி சென்றுள்ள நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தமிழகத்தின் கடன் சுமைக்கு மத்திய
அரசுதான் காரணம் என புதிய விஞ்ஞானமான பதிலை கூறுகிறார். அதே போல அமெரிக்காவின்
வரி விதிப்பால் பொருளாதார பாதிப்பு ஏற்பட்டதாக கூறுகிறார்.
சிறு, குறு தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டதற்கு ஜி.எஸ்.டி.மூலம் 10,000 கோடி வரி விதிப்பு தான் காரணம் என்று கூறுகிறார். இதுதான் கடன் சுமைக்கு அதிகரிக்க காரணம் என்று ஆட்சி முடியும் தருவாயில் நான்கரை ஆண்டுகளுக்கு கழித்து நிதி அமைச்சர் கூறுகிறார்.
ஏற்கனவே தமிழ்நாடு பொருளாதரத்தை கடன் சுமையை சீர்படுத்த குழு அமைத்து சீர் படுத்தப்படும் என எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது ஸ்டாலின் கர்ஜித்தார்
.ஆனால் இன்றைக்கு முதலமைச்சர் ஆன பிறகு அவர் சொல்லும் கருத்தும் அம்பலத்திற்கு
வந்துள்ளது இன்றைக்கு இயலாமை, அறியாமை ,நிர்வாக குளறுபடி இப்படி
ஏற்படுத்திவிட்டு, தமிழ்நாடு எதுவுமே இல்லாமல் என்ற நிலையை திமுக அரசு
தற்போது உருவாக்கியுள்ளது .
எதற்கெடுத்தாலும் அமெரிக்கா ஜப்பான், சீனாவை பாருங்கள் என என்று கூறி தங்களின்
நிர்வாக குளறுபடியை, தமிழகத்தின் கடன் சுமைகள் இவைகளால் மக்களிடத்தில் மூடி
மறைக்க, திசை திருப்பும் , வேளையில் தான் உள்ளது இந்த காலாவதி அரசு உள்ளது.
மக்களை திசை திருப்ப, பிறர் மீது பழியை போடுவது தான் திமுக அரசின் வேலை. ஆட்சிக்கு வரும் முன்பு 5,000 ரூபாய் பொங்கல் பரிசு கொடுக்க வேண்டும் என்று ஸ்டாலின் கூறினார் தற்போது ஆட்சிக்கு வந்த பின்பு 3000 ரூபாய் என்று
அறிவிக்கிறார் எதிர்க்கட்சி தலைவராய் இருந்த பொழுது தமிழக மக்கள் மீது ஸ்டாலின் காட்டிய
கரிசனம், அக்கறை எல்லாம் மறைந்து போன மர்மம் என்ன?
பொங்கல் பரிசு தொகையை திமுக கட்சி நிதி போல கொடுக்கிறார்கள். கடைகளில் திமுக
கொடியை கட்டி திமுக நடத்தும் நாடகத்தைப் பார்த்து மக்கள் வேதனை கொள்கிறார்கள்.
பொங்கல் பரிசுகளை திமுக வட்ட செயலாளர்கள், கிளைசெயலாளர்கள் வரும்வரை காத்திருந்து மக்களுக்கு கொடுக்கிறார்கள்.
திமுக கட்சிக்காரர்கள் வந்த பின்பு தான் பொங்கல் பரிசு கொடுக்க வேண்டும் என்று கட்டாயப் படுத்துகிறார்கள்.
பொங்கல் பரிசை திமுக சொந்த நிதியாக குடுப்பது போல நாடகத்தை நடத்துகிறார்கள்.
உதயநிதி ஸ்டாலின் சொன்னதுவது போல இன்றைக்கு நாங்களும் கூறுகிறோம் இந்த பணம்
உங்கள் வீட்டு பணமல்ல? உங்கள் அப்பன் வீட்டு பணமல்ல? இது மக்களின் பணம். திமுக
இதுபோன்று செய்வது திமுகவின் மரபாகும்.
இன்றைக்கு தமிழகத்தின் கடன் சுமையிலிருந்து மீட்டெடுத்து மீண்டும் தமிழகத்தை முதன்மை மாநிலமாக்க வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடியாருக்கு மக்கள்
மகுடம் சூட்டுவார்கள் என கூறினார்.
Hindusthan Samachar / GOKILA arumugam