Enter your Email Address to subscribe to our newsletters

ஒடிசா, 11 ஜனவரி (ஹி.ச.)
ஒடிஷாவில் இயக்குநர் மாருதி இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் உருவாகி கடந்த 9ஆம் தேதி வெளிவந்த படம் தி ராஜா சாப்.
இப்படத்தில் பிரபாஸ் உடன் இணைந்து மாளவிகா மோகனன், நிதி அகர்வால் மற்றும் ரிதி குமார் என மூன்று கதாநாயகிகள் நடித்திருந்தனர். மேலும் சஞ்சய் தத், யோகி பாபு, விடிவி கணேஷ் ஆகியோரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
பிரம்மாண்ட பொருட்செலவில் எடுக்கப்பட்டு வெளிவந்த இப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை முழுமையாக பூர்த்தி செய்யவில்லை. இதனால் மோசமான விமர்சனங்களை சந்தித்து வருகிறது.
இப்படம் உலகளவில் இரண்டு நாட்களில் ரூ. 140 கோடி வசூல் செய்துள்ளது.
இந்நிலையில் ஒடிசாவிலுள்ள ஒரு திரையரங்கில் திரையிடப்பட்ட போது ரசிகர்கள் திரைப்படத்தில் பிரபாஸ் வருகையின்போது திரைக்கு அருகே சென்று சூடம் ஏற்றியும் பட்டாசுகளை வெடித்தும் கொண்டாடியதால் தீவிபத்து ஏற்பட்டது.
இதனால் உள்ளே இருந்த பார்வையாளர்கள் பீதியடைந்து அவசரம் அவசரமாக வெளியேறினர்.
Hindusthan Samachar / GOKILA arumugam