திருப்பூர் குமரன் அவர்களின் புகழ் நாடெங்கும் பரவச் செய்வோம்! - முதல்வர் ஸ்டாலின்
சென்னை, 11 ஜனவரி (ஹி.ச.) இந்திய சுதந்திரப் போராட்டம் நடைபெற்ற காலத்தில் 1932 ஆம் ஆண்டு ஜனவரி 11 ஆம் தேதி திருப்பூரில் நடைபெற்ற வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில், திருப்பூர் குமரன் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். அப்போது கையில் ஏந்திய தேசிய கொடியு
திருப்பூர் குமரன் அவர்களின் புகழ் நாடெங்கும் பரவச் செய்வோம்! - முதல்வர் ஸ்டாலின்


சென்னை, 11 ஜனவரி (ஹி.ச.)

இந்திய சுதந்திரப் போராட்டம் நடைபெற்ற காலத்தில் 1932 ஆம் ஆண்டு ஜனவரி 11 ஆம் தேதி திருப்பூரில் நடைபெற்ற வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில், திருப்பூர் குமரன் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.

அப்போது கையில் ஏந்திய தேசிய கொடியுடன் ஊர்வலமாக சென்ற திருப்பூர் குமரன், ஆங்கிலேய காவல்துறையினரால் அடிபட்டு கையில் ஏந்திய தேசியக் கொடியுடன் உயிரிழந்தார்.

அவரது தியாகத்தை போற்றும் வகையில் திருப்பூர் ரயில் நிலையம் அருகே நினைவு மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. இன்று (ஜனவரி 11) அவரது நினைவு தினத்தை முன்னிட்டு முதல்வர் ஸ்டாலின் அவரை நினைவு கூர்ந்து மரியாதை செய்துள்ளார்.

அவர் எக்ஸ் தளத்தில் இன்று (ஜனவரி 11) கூறியிருப்பதாவது,

காந்தியப் பாதையில் போராடி, அந்நிய ஆட்சியின் அடக்குமுறைகளை நெஞ்சுரத்தோடு எதிர்கொண்டு உயிர்துறந்த தியாகி திருப்பூர் குமரன் அவர்களின் நினைவுநாள்!

இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்குபெற்ற தமிழர்களின் பெருமையைப் போற்றும் நாம், கொடி காத்த குமரன் அவர்களின் திருவுருவச்சிலையை ஈரோட்டில் நிறுவியதோடு, ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு எதிரில் உள்ள சாலைக்குத் 'தியாகி குமரன் சாலை' என்றும் பெயர் சூட்டியுள்ளோம்.

இன்னுயிரைவிடவும் தன்மானமும் தாய்நாட்டுப் பற்றும் பெரிதென வாழ்ந்த திருப்பூர் குமரன் அவர்களின் புகழ் நாடெங்கும் பரவச் செய்வோம்!

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Hindusthan Samachar / vidya.b