Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 11 ஜனவரி (ஹி.ச)
நாடு தழுவிய அளவில் செயல்பட்டதாகக் கூறப்படும் பல சட்டவிரோத கிட்னி அறுவை சிகிச்சை செய்யப்பட்டு விற்கப்பட்டதாகவும் சிகிச்சைகளுக்கு வழிவகுத்ததாக சந்தேகிக்கப்படும் ஒரு கும்பலுடன் திருச்சி கிம்ஸ் மருத்துவமனையின் இயக்குனரும் மருத்துவருமான ராஜரத்தினம், மற்றும் டெல்லியில் உள்ள மருத்துவர் ரவீந்தர் பால் சிங் ஆகியோர் இந்த சட்டவிரோத சம்பவத்தில் ஈடுபட்டது மகாராஷ்டிரா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அந்த அடிப்படையில் மகாராஷ்டிரா அரசு சிறப்பு குழுனார் அமைத்து விசாரணை மேற்கொண்டு வருகிறது அதனை தொடர்ந்து தமிழக அரசு சுகாதாரத்துறை மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் கூடுதல் இயக்குநர் (ஆய்வு) ஏ. பிரகலதன் தலைமையிலான மாநில அரசால் நியமிக்கப்பட்ட விசாரணைக்குழு முதற்கட்ட அறிக்கையைச் சமர்ப்பித்துள்ளது.
மூன்று நாட்கள் நடைபெற்ற விசாரணையின் போது, அந்தக் குழு சம்பந்தப்பட்ட நபர்களான மருத்துவர் மற்றும் நிர்வாக இயக்குநர் ஜி. ராஜரத்தினம் உட்பட பலரை விரிவாக விசாரித்தது.
விசாரணை மேற்கொண்டத்தில் கிட்னி தொடர்பில் இவர்கள் இருவரும் ஈடுபட்டுள்ளது தெரியவந்தது.
விசாரணைக்குழு, நோயாளிகளின் ஆவணங்கள், நன்கொடையாளர் மற்றும் மாற்று அறுவை சிகிச்சை பதிவேடுகள் போன்ற முக்கிய ஆவணங்களையும் பெற்றது.
இந்தக் ஆய்வின் அடிப்படையில், அந்தக் குழு முதற்கட்ட அறிக்கையைச் சமர்ப்பித்ததுடன் வரும் நாட்களில் முழு அறிக்கையையும் சமர்ப்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் பல சட்டவிரோத சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளதாகவும், இந்தச் சட்டவிரோத கும்பலில் ஈடுபட்ட இடைத்தரகர்கள் மூலம் நன்கொடையாளர்களை அடையாளம் காண்பதில் அந்த மருத்துவர் முக்கியப் பங்கு வகித்ததாகவும் மகாராஷ்டிரா காவல்துறை குற்றம் சாட்டில் நிலையில் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சட்டவிரோத கும்பலுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையின் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை உரிமம் ரத்து செய்யப்பட்டது.
மாநில அரசால் நியமிக்கப்பட்ட விசாரணைக்குழு முதற்கட்ட அறிக்கையைச் சமர்ப்பித்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
Hindusthan Samachar / P YUVARAJ