Enter your Email Address to subscribe to our newsletters

திருவனந்தபுரம், 11 ஜனவரி (ஹி.ச.)
கேரள மாநிலத்தில் அண்மையில் நடைபெற்று முடிந்த உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற பாஜ பிரதிநிதிகளை இன்று (ஜனவரி 11) மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சந்தித்தார்.
இந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது,
கேரளாவில் பாஜ எழுச்சி பெறுவது கடினம். நாம் அதிகாரத்தில் இல்லை. கொள்கையால் ஈர்க்கப்பட்ட தொண்டர்கள் கடினமாக உழைத்தனர். நமது நம்பிக்கையை உடைக்க முயன்றனர்.
ஆனால், பாஜ தொண்டர்கள் வலிமையாக நின்று வெற்றி பெற்றனர். வளர்ந்த கேரளா என்பதில் இருந்து வளர்ந்த பாரதம் உருவாகிறது.
எல்டிஎப் மற்றும் யுடிஎப் கூட்டணி மேட்ச் பிக்சிங் செய்து, மாநிலத்தை தேக்கம் அடைய வைத்துள்ளது. அவர்களின் கூட்டணி ஊழல் மற்றும் ஊழல் செய்பவர்களை பாதுகாப்பதை அடிப்படையாக கொண்டது.
அசாமில் 3வது முறையாக ஆட்சி அமைக்க போகிறோம். அடுத்து கேரளாவில் ஆட்சி அமைப்போம். முத்தலாக் சட்டத்தை இடதுசாரி மற்றும் காங்கிரஸ் கூட்டணிகள் எதிர்த்தன. வக்ப் மசோதாவுக்கும் எதிர்ப்பு தெரிவித்தன. திருப்திபடுத்தும் அரசியலை இரு கட்சிகளும் ஒப்புக் கொண்டுள்ளன. உலகம் முழுவதும் கம்யூனிஸ்ட் கட்சி காணாமல் போய்விட்டன. இந்தியாவில் காங்கிரஸ் கட்சியும் முடிந்து வருகிறது.
கேரளாவில் ஆட்சி அமைப்பதும், பாஜவை சேர்ந்தவரை முதல்வராக கொண்டு வருவதுமே நமது இறுதி நோக்கம். பாஜவுக்கு கேரளா ஆதரவு அளித்து வருகிறது. 2014ல் 11 சதவீதமாக இருந்த ஓட்டு சதவீதம் 2024 ல் 20 சதவீதமாக அதிகரித்துள்ளது.
பிஎப்ஐ மற்றும் ஜமாத் இஇஸ்லாமி அமைப்புகளிடம் இருந்து இடதுசாரி மற்றும் காங்கிரஸ் கட்சிகள் கேரளாவை பாதுகாப்பாக வைத்து இருக்க முடியுமா? ஓட்டு வங்கி அரசியல் காரணமாக அவர்களால் முடியாது. பிரிவினைவாத எண்ணம் கொண்டு அந்த அமைப்புகளிடம் இருந்து தேஜ கூட்டணி மட்டுமே கேரளாவை பாதுகாப்பாக வைத்து இருக்க முடியம்.
சபரிமலையில் நடந்த தங்கம் திருட்டு தொடர்பான விசாரணையை பொதுவான அமைப்பிடம் முதல்வர் ஒப்படைக்க வேண்டும். நேர்மையான விசாரணை நடைபெறும் வரை கிராமம் வரை பாஜ போராட்டம் நடத்தும். சபரிமலை தங்கத்தை பாதுகாக்க முடியாதவர்கள் எப்படி நமது நம்பிக்கையை பாதுகாப்பார்கள்.
காங்கிரஸ் ஆட்சிக்கு வருவதை எப்போதும் இடதுசாரிகள் உதவி வந்தனர். இந்த முறை அப்படி செய்ய முடியாது.
கேரளா மற்றும் மேற்கு வங்கத்தில் ஒரே நேரத்தில் தேர்தல் நடைபெறும். இல்லாவிடில், மேற்கு வங்கத்தில் அவர்கள் நட்பு ரீதியில் போட்டியிடுவார்கள். அங்கு இரு கட்சிகளும் ஒன்றும் இல்லை. இந்த முறை மேற்கு வங்கத்தில் பாஜ ஆட்சி அமைக்கும்.
இவ்வாறு அமித்ஷா பேசினார்.
Hindusthan Samachar / vidya.b