Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 11 ஜனவரி (ஹி.ச)
அரசுப் பள்ளிகளில் 2025-26ம் கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான தமிழ்நாடு முதலமைச்சரின் திறமைத் தேடல் தேர்வு 31.1.2026 அன்று நடைபெற உள்ளது.
இத்தேர்வுக்கு அரசுப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயிலும் மாணாக்கர்களிடமிருந்து விண்ணப்பங்களை பெற்று உரிய விவரங்களை சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமையாசிரியர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளம் வழியாக 26.1.2025 முதல் 10.1.2026 வரை பதிவேற்றம் செய்ய கால அவகாசம் வழங்கப்பட்டது.
தற்போது, மாணவர்களின் நலன் கருதி அதிக மாணவர்கள் பயன்பெறும் வகையில் இக்கால அவகாசம் 12.1.2026 (நாளை) வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதற்கு மேல் கால அவகாசம் நீட்டிக்கப்படமாட்டாது என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
Hindusthan Samachar / vidya.b