Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 11 ஜனவரி (ஹி.ச)
தியாகி திருப்பூர் குமரனின் நினைவுதினம் இன்று
(ஜனவரி 11) அனுஷ்டிக்கப்படுவதை முன்னிட்டு அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவரை நினைவுகூர்ந்து மரியாதை செய்துள்ளார்.
இது தொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் இன்று கூறியிருப்பதாவது,
இந்திய விடுதலைப் போராட்ட வீரரும், ஆங்கிலேயர்களால் உயிர்போகும் அளவிற்குத் தாக்குதலுக்குள்ளாகி ரத்த வெள்ளத்தில் மிதந்த போதிலும் தன் கையில் வைத்திருந்த தேசியக் கொடியை உயர்த்திப் பிடித்த தேசம் போற்றும் தியாகி திருப்பூர் குமரன் அவர்களின் நினைவுதினம் இன்று.
சிறு வயது முதலே தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகளின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, இளைஞர்களிடம் சுதேசி சிந்தனைகளை ஆழமாக விதைத்ததோடு, இந்திய சுதந்திரத்திற்காக இறுதிவரை போராடி தன்னுயிர் நீத்த கொடிகாத்த குமரன் அவர்களின் தேசப்பற்றையும், தியாக உணர்வையும் எந்நாளும் போற்றி வணங்கிடுவோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Hindusthan Samachar / vidya.b