Enter your Email Address to subscribe to our newsletters

கோவை, 12 ஜனவரி (ஹி.ச.)
அதிமுக ஒருங்கிணைப்பு குழுவின் நிர்வாகி புகழேந்தி, கோவையில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில்,
சரியான நேரத்தில் சரியான முடிவை எடுக்க வேண்டும்.
எடப்பாடி பழனிச்சாமி பாஜக கட்டுப்பாட்டில் இருக்கிறார்.
பாஜக அதிக இடங்களை கேட்பது போல் தெரிகிறது என்றும் வருமான வரித்துறை ஃபைல் என்றால் EPS பாஜக கேட்கும் இடத்தை கொடுத்து விடுவார்.
யாரோ ஒரு பெண் வந்து ஜெயலலிதா தான் எனது அம்மா என கூறுகிறார், அவர் இருக்கும் போது அப்படி கூற முடியுமா? என கேள்வி எழுப்பினார்.
ஜெயலலிதா இருந்திருந்தால் பாஜகவினர் இது போன்று குதித்து கொண்டிருக்கமாட்டார்கள் அவர்கள் இல்லாததால் தான் அனைத்தும் தலைகீழாக மாறியது.
உள்ளாட்சி தேர்தலையே அதிமுக நடத்தாமல் திமுக ஸ்டாலின் வந்து தான் நடத்தியதாக தெரிவித்தார்.
ஊழல் குற்றசாட்டுகளில் ஊறி போய் இருக்கிறார்கள் அதிமுக ஊழலை பற்றி கவர்னரிடம் மனு அளித்தவர் முதல்வர் என்று குறிப்பிட்டார். பெருமாநல்லூரில் பொள்ளாச்சி ஜெயராமனின் மகன் சென்ற காரில் ஒரு பெண் விபத்தில் உயிரிழந்தால் என்று கதையே மாறியதாகவும் அன்று பொள்ளாச்சி ஜெயராமன் துணை சபாநாயகராக இருந்ததால் அவர் தப்பித்தார், அந்த பெண் கொலை செய்யப்பட்டவர் என கூறியது அன்றைய எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் தான்.
ஜெயலலிதா இறப்பில் சந்தேகம் அதை பற்றி வெளியில் கொண்டு வருவோம் என முதல்வர் கூறினாரே அது என்ன ஆனது.
ஜனநாயகத்தில் ஜனநாயகம் இல்லை, என்றும் ஜனநாயகன் படத்தை மரியாதையுடன் ரிலீஸ் செய்யுங்கள், இல்லையென்றால் அவருக்கு ஆதரவு தான் அதிகரிக்கும்.
உலகத்திலேயே தமிழுக்காக போராடியது ஒரே நாடு தமிழ்நாடு தான்.
பாஜக பின்னால் EPS, OPS , சசிகலா, பெயர் சொல்ல முடியாத நண்பர் இருக்கிறார்கள் என்று விமர்சித்தார்.
தேர்தல் நேரத்தில் நாங்கள் ஒரு கட்சியை ஆதரிக்க தான் போகிறோம் என்றார். தலைவரின்(எம்ஜிஆர்) பைலாவை தொட்டான் அவன் கெட்டான் என்று கூறிய அவர் அதிமுகவின் நிரந்தர பொதுசெயலாளர் ஜெயலலிதா என்பதை தூக்கி வீசிய கொடியவன் எடப்பாடி பழனிச்சாமி என குறிபிட்டார்.
இந்த தேர்தலில் பழனிசாமி எதிர்கட்சி தலைவர் ஆக முடியாது
ஒரு இடத்தில் கூட ஜெயிக்க முடியாது என்றும் செங்கோட்டையன் ஜெயிக்க தான் வாய்ப்புள்ளது என்றும் தெரிவித்தார். மேலும் எடப்பாடி பழனிச்சாமியால்
சேலத்தில் கூட பழனிச்சாமி ஜெயிக்க முடியாது என்றார்.
இந்த முறை போட்டி திமுக- தவெக விற்கு தான் என கூறினார்.
சீமான் மூன்றாவது இடத்திற்கு வருவார், எடபாடி நான்காவது இடத்திற்கு போவார்.
எங்களால் அதிமுகவை ஒருங்கிணைக்க முடியவில்லை என்றும் அதிமுக தலைவர்களை ஒருங்கிணைந்து செல்ல முடியாது, எனவே தொண்டர்கள் ஒருங்கிணைத்து செல்ல போகிறோம் என்றார்.
அதிமுக சேர்வதற்கு வாய்ப்பே இல்லை என்றும் தற்கொலை செய்து கொள்வது போல அதிமுக அழிவை நோக்கி செல்கிறது என்றார்.
பொள்ளாச்சி பாலியல் வழக்கு போன்று இங்கு ஏதாவது வராமல் பார்த்து கொள்ள வேண்டும்.
எடப்பாடி பழனிச்சாமி 2026 உடன் க்லோஸ் ஆவார் 2026 தேர்தல் முடிவு வரும் போது தோல்விக்கு யார் காரணமோ அவர்களை அதிமுக தொண்டர்கள் துரத்தி துரத்தி அடிப்பார்கள்.
பழனிச்சாமி மீது நடவடிக்கை எடுக்காததால் தான் நாங்கள் முதல்வரை எதிர்ப்பதாக தெரிவித்தார். அதிமுக தலைவர்களை இனி ஒருங்கிணைக்க முடியாது எனவே தொண்டர்களை ஒருங்கிணைக்க போகிறோம்.
தேர்தலில் நிற்பதற்கு எடப்பாடி பழனிச்சாமி உடன் இருப்பவர்களே தயாராக இல்லை என்றார்.
நான்கு பேரும் பாஜக பிடியில் இருக்கிறார்கள் என்றும் ஒருவரும் பாஜகவில் இருந்து வெளியில் வர மாட்டார்கள் எனவே அதிமுக படுதோல்வி அடையும் என தெரிவித்தார். கோடநாடு வழக்கில் ஏன் முதல்வர் விசாரணை நடத்த மறுக்கிறார்? என கேள்வி எழுப்பிய அவர் எடப்பாடி பழனிசாமி ஜெயிலில் இருக்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
Hindusthan Samachar / Durai.J