Enter your Email Address to subscribe to our newsletters

அவனியாபுரம், 12 ஜனவரி (ஹி.ச.)
உலகப்புகழ் பெற்ற மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிக்கான முன்னேற்பாட்டுப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
தைப்பொங்கல் தினத்தன்று நடைபெறவுள்ள இந்தப் போட்டிக்காக, தற்போது 50 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளது. காளைகள் வெளியே வரும் பிரதான பகுதியான வாடிவாசலுக்கு வண்ணம் தீட்டும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
வீரர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், முதற்கட்டமாக மரக்கட்டைகளால் ஆன தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து, கூடுதல் பலத்திற்காக அவற்றைச் சுற்றி இரும்பு வேலிகள் அமைக்கும் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
போட்டியைக்காண வரும் பொதுமக்களுக்காகவும், வீரர்களுக்காகவும் ஆங்காங்கே குடிநீர் தொட்டிகள் கொண்டு வரப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட உள்ளன.
அவனியாபுரம் ஜல்லிக்கட்டுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், மாவட்ட நிர்வாகமும் மாநகராட்சியும் இணைந்து பாதுகாப்பு மற்றும் சுகாதாரப் பணிகளை முடுக்கிவிட்டுள்ளன.
Hindusthan Samachar / Durai.J