Enter your Email Address to subscribe to our newsletters

விருதுநகர், 12 ஜனவரி (ஹி.ச.)
சிவகாசியில் அமைந்துள்ள தனியார் கல்லூரியில் வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு மினி மாராத்தான் ஓட்டம்
நடை பெற்றது.
உடல்நலம் சிறக்க ஓடு, எதிர்காலம் சிறக்க வாக்களி என்ற தலைப்பில் நடைபெற்ற மினி மாராத்தான் ஓட்டத்தில் 3000ற்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
மாணவர்களுக்கு 12 கிலோமீட்டர் தூரமும், மாணவியருக்கு 4 கிலோ மீட்டர் தூரமும் நிர்ணயிக்கப்பட்டது.
சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் 100% வாக்களிக்க வேண்டும் என்பதனை வலியுறுத்தி மாணவ மாணவியர் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இதில் முதல் 10 இடங்களை பிடித்த தலா 10 மாணவ மாணவியருக்கு ரொக்க பரிசு வழங்கப்பட்டது.
Hindusthan Samachar / Durai.J