தங்க நகையை ஒப்படைத்த பத்மாவை பாராட்டி முதலமைச்சர். மு க ஸ்டாலின் ஒரு லட்சம் காசோலை வழங்கினார்
சென்னை, 12 ஜனவரி (ஹி.ச) தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில், பெருநகர சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளர் பத்மா அவர்கள் சென்னை, தியாகராய நகர், வண்டிக்காரன் சாலையில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்தபோது கண்டெடுத்த 45 சவரன் தங்க ந
Cm


சென்னை, 12 ஜனவரி (ஹி.ச)

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில், பெருநகர சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளர் பத்மா அவர்கள் சென்னை, தியாகராய நகர், வண்டிக்காரன் சாலையில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்தபோது கண்டெடுத்த 45 சவரன் தங்க நகைகளை பாண்டிபஜார் காவல் நிலையத்தில் ஒப்படைத்து, பிறருக்கு முன்னுதாரணமாக திகழ்ந்ததை பாராட்டி, அவருக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்து, பரிசுத்தொகையாக ரூபாய் ஒரு இலட்சத்திற்கான காசோலையினை வழங்கினார்.

இந்நிகழ்வின்போது இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம், இ.ஆ.ப., நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலாளர் முனைவர் தா.கார்த்திகேயன், இ.ஆ.ப., பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் திரு.ஜெ.குமரகுருபரன், இ.ஆ.ப., இணை ஆணையர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Hindusthan Samachar / P YUVARAJ