புதுக்கோட்டை மன்னர் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா நடத்த வேண்டும் என்று மாணவர்கள் கல்லூரி வாசலில் அமர்ந்து போராட்டம்
புதுக்கோட்டை, 12 ஜனவரி (ஹி.ச.) புதுக்கோட்டை மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி இயங்கி வருகிறது. கல்லூரியில் காலை மாலை என இரு பிரிவாக 5 ஆயிரத்திற்கும் அதிகமான மாணவ மாணவியர் கல்வி பயின்று வருகிறார்கள். இன்று மாணவ மாணவியர் வகுப்புகளை புறக்கணித்து க
Student


புதுக்கோட்டை, 12 ஜனவரி (ஹி.ச.)

புதுக்கோட்டை மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி இயங்கி வருகிறது.

கல்லூரியில் காலை மாலை என இரு பிரிவாக 5 ஆயிரத்திற்கும் அதிகமான மாணவ மாணவியர் கல்வி பயின்று வருகிறார்கள்.

இன்று மாணவ மாணவியர் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி வாசலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இது குறித்து மாணவர்கள் கூறுகையில்,

ஆண்டுதோறும் கல்லூரியில் பொங்கல் விழா நடத்துவது வழக்கமாக இருந்தது.

இந்நிலையில் இந்த ஆண்டு பொங்கல் விழாவை கல்லூரி நிர்வாகம் நடத்தவில்லை. பொங்கல் விழா வைக்க வேண்டும் என்று கல்லூரி பேராசிரியர்களிடமும் கல்லூரி முதல்வர் இடத்திலும் கோரிக்கைகள் வைத்தோம்.

ஆனால் இந்த ஆண்டு பொங்கல் விழா வைக்க முடியாது என்று கல்லூரி முதல்வர் கறாராக சொல்லிவிட்டார்.

கடந்த மாதம் 23ஆம் தேதி கல்லூரியில் அடிப்படை வசதிகள் வேண்டும் என்று கோரிக்கை வைத்து மாணவர்கள் அமைப்பின் சார்பாக ஒரு ஆர்ப்பாட்டம் நடத்தி இருந்தோம்.

அதைக் காரணமாக வைத்து பொங்கல் விழாவை ரத்து செய்து இருக்கிறார்கள். எனவே பொங்கல் விழா நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்து இன்று வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம் என்று தெரிவித்தனர்.

போராட்டம் நடந்த இடத்திற்கு தகவல் அறிந்து நகர காவல் ஆய்வாளர் சுகுமாறன் வந்து சேர்ந்தார்.

கல்லூரி முதல்வர் மற்றும் நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி பொங்கல் விழா நடத்த சம்மதித்தனர்.

மேலும் உங்கள் விழாவை எவ்வாறு கொண்டாட வேண்டும் என்பது குறித்து பல கட்டுப்பாடுகளை கல்லூரி நிர்வாகமும் தெரிவித்தது.

காவல் ஆய்வாளர் சுகுமாறனும் பல்வேறு விதிமுறைகளை எடுத்துக் கூறி இந்த விதிமுறைகளை மீறினால் உடனடியாக காவல்துறை விதிமுறையை மீறியவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுத்து கைது செய்யும் என்பதையும் தெரிவித்தார்.

மாணவர்களும் அதற்கு சம்மதித்ததால் ஒரு மணி நேரம் நடந்த அந்த போராட்டம் முடிவுக்கு வந்தது.

Hindusthan Samachar / Durai.J