Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 12 ஜனவரி (ஹி.ச.)
சென்னை தலைமை செயலகத்தில் தலைமை தேர்தல் அதிகாரியை சந்தித்த பிறகு சிபிஎம் மாநிலச் செயலாளர் சண்முகம் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர்,
வாக்காளர் பட்டியல் புதிதாக பெயர் ஜன 18ம் தேதி வரை விண்ணப்பங்களை சமர்பிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
ஆனால் பொங்கல் விடுமுறை காரணமாக இந்த வாரம் எஸ்ஐஆர் பணிகள் நடக்க வாய்ப்பு இல்லை. பொதுமக்களும் இல்லாமல், அதிகாரிகளும் இல்லாமல் இந்தப் பணியில் பெரிய பாதிப்பு ஏற்படும்.
எனவே வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான கால அவகாசத்தை மேலும் 10 நாட்கள் நீட்டிக்க வேண்டும். எனவே ஜனவரி 28ம் தேதி வரை நீட்டிக்க வேண்டும். மேலும் ஜனவரி 24 மற்றும் 25ம் தேதி சிறப்பு முகாம் நடத்த வேண்டும்.
இதை செய்யாமல் போனால் பல லட்சம் பேர் வாக்காளர் பட்டியல் இருந்து இடம் பெற முடியாத நிலை ஏற்படும்.
வாக்காளர் பட்டியிலில் இருந்து நீக்கப்பட்டவர்களின் விவரங்களை எங்களின் தொழில்நுட்ப குழு ஆய்வு செய்துள்ளது.
இதில் இறந்து போனவர்களின் விவரங்கள் பல தொகுதிகளில் மாநில சராசரி மற்றும் அகில இந்திய சராசரி விட அதிகமாக உள்ளது.
18 முதல் 41 வயது வரை உள்ளவர்கள் அதிகமாக இறந்துள்ளது தெரியவந்துள்ளது.
இடம் பெயர்ந்தவர்களில் 41 முதல் 61 வயது வரை உள்ளவர்கள் அதிகமாக உள்ளனர்.
இவை எல்லாம் மிகப் பெரிய குழப்பம் மற்றும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / P YUVARAJ