Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 12 ஜனவரி (ஹி.ச.)
கரூர் துயரம் சம்பவத்தைத் தொடர்ந்து நடிகர் மற்றும் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய்க்கு, கடந்த ஆறாம் தேதி டெல்லி சிபிஐ அதிகாரிகள் சம்மன் அனுப்பினார்கள். இன்று காலை 11 மணி அளவில் டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் விஜய் ஆஜராக வேண்டும் என கூறப்பட்டது.
இதனை தொடர்ந்து இன்று காலை பனையூரில் உள்ள தன்னுடைய இல்லத்தில் இருந்து புறப்பட்டு சென்னை விமான நிலையத்துக்கு வந்தடைந்தார். தற்போது பனிமூட்டம் காரணமாக 35 நிமிடம் விமானம் தாமதமாக புறப்படுகிறது.
இதன் காரணமாக விஜய் அவர் காரில் அமர்ந்து இருந்தார். பனிமூட்டம் குறைந்த உடன் விமானம் நிலையம் அதிகாரிகள் தகவல் தெரிவித்தவுடன், விஜய் சென்னை விமான நிலையத்திலிருந்து புறப்பட்டார்.
அவருடன் தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் நிர்மல் குமார், ஆதவ் அர்ஜுனா மற்றும் அவருடைய நண்பர் உடன் அவர் தனி விமானத்தில் டெல்லி செல்கிறார்.
அவர் அங்கு டெல்லி சென்றவுடன், இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இறங்கி அங்கிருந்து நட்சத்திர விடுதிக்கு சென்று சிறிது நேரம் ஓய்வு எடுப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் தற்பொழுது விமானம் பனிமூட்டம் காரணமாக தாமதமாக புறப்படுவதால், அவர் நேராக டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்திற்கு செல்வதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே விஜய்க்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என டெல்லி காவல்துறைக்கு தமிழக வெற்றி கழக மூலமாக கடிதம் வழங்கப்பட்டது. இன்று டெல்லியில் சிபிஐ அலுவலகத்தில் விசாரணை நடைபெறும் நிலையில், அவரிடம் குறைந்தது ஆறு மணி நேரம் விசாரணை நடைபெறும் என தகவல் தெரிவிக்கப்படுகிறது.
விசாரணை முடிந்தவுடன் அவர் மீண்டும் தனி விமானம் மூலம் சென்னை திரும்புவார் என்று கூறப்படுகிறது.
Hindusthan Samachar / ANANDHAN