Enter your Email Address to subscribe to our newsletters

கோவை, 12 ஜனவரி(ஹி.ச.)
தமிழ்நாட்டின் அறுவடைத் திருநாளான பொங்கலை கேம்ஃபோர்டு சர்வதேச பள்ளி
உற்சாகமாக கொண்டாடியது.
இதற்காக பொங்கல் விழாவை பிரதிபலிக்கும் வகையில் பண்டிகை அலங்காரங்கள், கோலங்கள், கரும்பு அலங்காரங்கள், மண் பானைகள் என பாரம்பரிய முறையில்
மாணவர்களும் ஆசிரியர்களும் கலாச்சார உடையில் பொங்கல் வைத்து உண்டு மகிழ்ந்தனர்.
இந்த கொண்டாட்டங்களில் நாட்டுப்புற நடனங்கள், பாரம்பரிய இசை, பொங்கலின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டும் குறும்படங்கள் மற்றும் விவசாய வாழ்க்கையுடன் தொடர்புடைய பழங்கால பழக்கவழக்கங்கள் இடம்பெற்றன. இந்நிகழ்வில் விவசாயிகள், இயற்கை மற்றும் கால்நடைகளுக்கு நன்றி தெரிவித்தனர்.
இதில் பள்ளி நிர்வாகிகள், கலாச்சார விழிப்புணர்வு, பாரம்பரியத்திற்கான மரியாதை மற்றும் நன்றியுணர்வு மற்றும் ஒற்றுமையின் மதிப்புகளை வளர்ப்பதில் பொங்கல் போன்ற பண்டிகைகளின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தனர்.
கேம்ஃபோர்டு சர்வதேச பள்ளியின் பொங்கல் கொண்டாட்டம் இந்தியாவின் வளமான பாரம்பரியத்தின் மீதான ஆழமான பற்றை வெளிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / Durai.J