நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு 7 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் - மாற்றுத்திறனாளி ஒருவர் பொதுநல மனு தாக்கல்
சென்னை, 12 ஜனவரி (ஹி.ச.) நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு 7 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் எனவும் உரிய சட்டம் கொண்டுவர மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளத
Mat


சென்னை, 12 ஜனவரி (ஹி.ச.)

நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு 7 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் எனவும் உரிய சட்டம் கொண்டுவர மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரை சேர்ந்த மாற்றுத் திறனாளியான கே.மணிவண்ணன் என்பவர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.

மாற்றுத் திறனாளிகளுக்கு முறையான கல்வி, அரசு வேலைவாய்ப்பு ஆகியவற்றில் 4 சதவீத இட ஒதுக்கிடு வழங்கியும் முறையாக கிடைக்கவில்லை எனவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது

இட ஒதுக்கீடு தொடர்பாக இந்திய அரசியல் அமைப்பு சட்டத்திலும், தொகுதி மறுவரையறை சட்டத்திலும் வழிவகை செய்யப்படவில்லை எனவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / P YUVARAJ