Enter your Email Address to subscribe to our newsletters

கிருஷ்ணகிரி, 12 ஜனவரி (ஹி.ச.)
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மற்றும் கர்நாடக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால் கெலவரப்பள்ளி நீர்தேக்க அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து மூன்று
நாட்களாக 699 கனஅடிநீர் வந்துக்கொண்டிருக்கிறது.
கெலவரப்பள்ளி நீர்தேக்க அணையின் முழுக்கொள்ளளவான 44.28 அடிகளில் 41.33 அடிகள் நீர் சேமிக்கப்பட்டுள்ளது.
கெலவரப்பள்ளி அணையிலிருந்து தென்பெண்ணை ஆற்றில் 699 கனஅடிநீர் திறக்கப்பட்டு
வருகிறது.
ஆற்று நீரில் கலக்கப்பட்ட அதிகப்படியான ரசாயன நுரை காரணமாக அணையிலிருந்து
ஆற்றில் வெளியேறும் நீரில் குவியல் குவியலாக நுரைப்பொங்கி நீராக இல்லாமல் நுரையாக மட்டுமே காட்சியளித்து ஆற்றில் செல்லும் செல்கிறது.
மழைக்காலங்களில் ஆற்றில் நுரைப்பொங்கி செல்வது வழக்கம் என்றாலும் மழை
இல்லாதபோதும் ஆற்றில் நுரைப்பொங்கி செல்வது விவசாயிகளிடம் கவலையை ஏற்படுத்தி
உள்ளது.
Hindusthan Samachar / GOKILA arumugam