பொங்கல் பரிசு வாங்க சென்ற 87 வயது மூதாட்டி உயிரிழப்பு!
கோவை, 12 ஜனவரி (ஹி.ச.) கோயம்புத்தூர் மாவட்டம், பேரூர் அருகே உள்ள வேடபட்டி சத்யா நகரை சேர்ந்தவர் வீரம்மாள் என்ற 87 வயது மூதாட்டி. இவரது கணவர் உயிரிழந்துவிட்ட நிலையில், அவர் கஸ்தூரிநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தங்கி வேலை செய்து வந்துள
Death


கோவை, 12 ஜனவரி (ஹி.ச.)

கோயம்புத்தூர் மாவட்டம், பேரூர் அருகே உள்ள வேடபட்டி சத்யா நகரை சேர்ந்தவர் வீரம்மாள் என்ற 87 வயது மூதாட்டி. இவரது கணவர் உயிரிழந்துவிட்ட நிலையில், அவர் கஸ்தூரிநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தங்கி வேலை செய்து வந்துள்ளார்.

யாருடைய ஆதரவும் இன்றி அவர் தனியாக வாழ்ந்து வந்துள்ளார். இந்த நிலையில், பொங்கல் பாரிசு தொகுப்பு வாங்குவதற்காக அவர் ஆட்டோவில் நாகராஜபுரம் பேருந்து நிலையத்திற்கு வந்துள்ளார்.

பேருந்து நிலையத்தில் இறங்கிய அந்த மூதாட்டி அங்கிருந்து ரேஷன் கடைக்கு நடந்துச் சென்றுக்கொண்டு இருந்துள்ளார். அப்போது அவர் எதிர்பாராத விதமாக சாலை ஓரத்தில் மயங்கி விழுந்துள்ளார்.

அதனை கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக மூதாட்டியை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால், அங்கு மூதாட்டியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பொங்கல் சிறப்பு பரிசு வாங்க சென்ற மூதாட்டி மயங்கி விழுந்து பலியான சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Hindusthan Samachar / ANANDHAN