Enter your Email Address to subscribe to our newsletters

ரஜோரி, 12 ஜனவரி (ஹி.ச.)
ஜம்மு மற்றும் காஷ்மீரில், போலீசார் மற்றும் எல்லை பாதுகாப்பு படையினர் கூட்டாக நடத்திய தேடுதல் வேட்டையின்போது, சம்பா மாவட்டத்தில் உள்ள எல்லையோர கிராமத்தில் இருந்து சீன தயாரிப்பு கைத்துப்பாக்கி, வெடிக்க தயார் நிலையிலுள்ள தோட்டாக்கள், சீன தயாரிப்பு கையெறி குண்டு உள்ளிட்ட ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த நிலையில், ஜம்மு மற்றும் காஷ்மீரின் நவ்ஷேரா-ரஜோரி பிரிவில் அமைந்த எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் நேற்றிரவு சில டிரோன்கள் (ஆளில்லா விமானங்கள்) பறந்தன.
இந்த டிரோன்களை பார்த்ததும் இந்திய ராணுவம் உஷாரானது.
இது பற்றி பாதுகாப்பு படை வட்டாரங்கள் வெளியிட்ட செய்தியில்,
காஷ்மீரின் ரஜோரி பிரிவில் சில பாகிஸ்தான் டிரோன்கள் பறந்தன. அவற்றை பார்த்ததும், டிரோன் எதிர்ப்பு நடவடிக்கைகளை இந்திய படை வீரர்கள் எடுத்தனர்.
அவற்றை விரட்டியடிக்கும் பணியை மேற்கொண்டனர்.
என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / JANAKI RAM