Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 12 ஜனவரி (ஹி.ச.)
சென்னையில் ரூ 23.13 கோடி மதிப்பீட்டில் சைதை அப்துல் ரசாக் காய்கறி அங்காடி புதியதாக எழிலார்ந்த நவீன வசதிகளுடன் கட்டுமானப் பணிகள் தொடங்கி வைக்கப்பட்டது. மேலும் சைதாப்பேட்டையில் மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
'சமத்துவம் பொங்கட்டும்-தமிழ்நாடு வெல்லட்டும்' என்ற பொங்கல் விழாவில் பங்கேற்ற தமிழக மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன்,
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அடுத்த ஆண்டு முழு பயன்பாட்டுக்கு வரும் என தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக அரசின் முக்கிய முயற்சியான ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதாகக் கூறினார்.
இந்தத் திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து கடந்த டிசம்பர் 9ஆம் தேதி வரை மாநிலம் முழுவதும் 934 சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் 14.21 லட்சம் பேர் பயனடைந்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
மேலும், கடந்த 23 வாரங்களில் முதல்வரின் புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சுமார் 41,000 பேருக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகள் தொடர்பாக பேசிய அமைச்சர், “தமிழக அரசின் தொடர் அழுத்தத்தின் காரணமாக மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கட்டுமானப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இதன் முதற்கட்டப் பிரிவு அடுத்த ஆண்டு பயன்பாட்டுக்கு வரும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேலும் வேகப்படுத்தும், என உறுதியளித்தார்.
மதுரை மற்றும் தென் மாவட்ட மக்களுக்கு உயர்தர மருத்துவ சேவைகளை வழங்கும் நோக்கில் எய்ம்ஸ் மருத்துவமனை முக்கிய பங்காற்றும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
Hindusthan Samachar / ANANDHAN