Enter your Email Address to subscribe to our newsletters

அரியலுார், 12 ஜனவரி (ஹி.ச.)
அரியலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம்,
(லிமிடெட்) திருச்சிராப்பள்ளி மண்டலத்தின் சார்பில் அரியலூர் பணிமனை வளாகத்தில் சமத்துவ பொங்கல் விழா போக்குவரத்து மற்றும் மின்சார துறை அமைச்சர் சா. சி. சிவசங்கர் தலைமையில் நடைபெற்றது.
சமத்துவ பொங்கல் விழாவில் போக்குவரத்து கழக பணியாளர்களுக்கும், அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகளுக்கும் பொங்கல் மற்றும் புத்தாடையினை பொங்கல் பரிசாக போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் திருச்சிராப்பள்ளி மண்டல பொது மேலாளர் டி. சதீஷ்குமார் துணை மேலாளர்கள் புகழேந்தி ராஜ், இராஜேந்திரன், மற்றும்
தொமுச நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Hindusthan Samachar / Durai.J