மருத்துவமனையில் உள்ள குழந்தை பிறக்கும் இடத்தில் ரவுடியை வெட்டி கொலை செய்த மர்ம நபர்கள்
சென்னை, 12 ஜனவரி (ஹி.ச.) சென்னை கொளத்தூர் மகாத்மா காந்தி நகர் நான்காவது தெரு பகுதியை சேர்ந்தவர் ஆதி (20) இவருடைய முன்னாள் தோழியான சுசித்ரா (21) என்பவருடைய குழந்தை கடந்த மாதம் பதினெட்டாம் தேதி பிறந்து நேற்று உடல் நலம் சரியில்லாமல் சிகிச்சை பலன் இன்
கொலை


சென்னை, 12 ஜனவரி (ஹி.ச.)

சென்னை கொளத்தூர் மகாத்மா காந்தி நகர் நான்காவது தெரு பகுதியை சேர்ந்தவர் ஆதி (20) இவருடைய முன்னாள் தோழியான சுசித்ரா (21) என்பவருடைய குழந்தை கடந்த மாதம் பதினெட்டாம் தேதி பிறந்து நேற்று உடல் நலம் சரியில்லாமல் சிகிச்சை பலன் இன்றி இறந்துள்ளது.

இவர்களை பார்ப்பதற்காக ஆதி இன்று அதிகாலை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் உள்ள லேபர் வார்டுக்கு சென்றுள்ளார்.

அப்பொழுது சுசித்ராவின் உறவினர்களான சூர்யா,, அலிபாய், மற்றும் கார்த்திக் ஆகியோர் ஆதியை தலை மற்றும் கை கால் ஆகிய இடங்களில் சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பித்துள்ளனர்.

ரத்த வெள்ளத்தில் சரிந்த ஆதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் மேலும் மருத்துவமனை லேபர் வார்டுக்குள்ளேயே இந்த சம்பவம் நடைபெற்ற பொழுது அங்கிருந்த நோயாளிகள் மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் கீழ்ப்பாக்கம் போலீசார் ஆதி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் சவக்கடங்கிற்கு எடுத்துச் சென்றுள்ளனர்.

ஆதியை கொலை செய்து விட்டு தப்பித்து சென்ற மூன்று பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

Hindusthan Samachar / GOKILA arumugam