Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 12 ஜனவரி (ஹி.ச.)
பாஜக இளைஞரணித் தலைவர் S.G.சூர்யா மீது போலி வழக்குகளைப் பதிந்துள்ளது கடும் கண்டனத்திற்குரியது என திமுகவை கண்டித்து பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,
மூன்று நாட்களுக்கு முன், தனியார் தொலைக்காட்சியில் விவாத மேடையில் எதிர் கருத்துகளை முன்வைத்ததற்கு தமிழக பாஜக இளைஞரணித் தலைவர் சகோதரர் எஸ்.ஜி.சூர்யா மீது குண்டர்களை வைத்துத் தாக்குதல் நடத்திய திமுக, நேற்று தமிழக பாஜக இளைஞரணி செயற்குழு உறுப்பினரான லால் பிரசாத் நாயுடுவை கைது செய்ததோடு, தற்போது G1 வேப்பேரி காவல் நிலையத்தில் SG சூர்யா மீது போலி வழக்குகளைப் பதிந்துள்ளது கடும் கண்டனத்திற்குரியது.
எதிர்க்கட்சியினரை முடக்கி, தனது தவறுகளை மறைக்கும் குறிக்கோளுடன் ரௌடிகள் முதல் தங்கள் ஏவல்துறையாக செயல்படும் காவல்துறை வரை அனைத்து அஸ்திரங்களையும் தொடர்ந்து பயன்படுத்தி வருகிறது மக்கள் விரோத திமுக அரசு.
உலகத் தலைவர்கள் வரிசையில் மிக உயரிய நிலையில் இருக்கக் கூடிய பிரதமர் நரேந்திரமோடிக்கு கொலைமிரட்டல் விடுத்த திமுகவினரைக் கண்டிக்காமல், இதுபோன்று ஜனநாயகப் படுகொலை செய்வது அராஜகத்தின் உச்சம்.
அறவழியில் போராடி மக்கள் சக்தி எனும் பெருந்துணை கொண்டு பாஜக-வின் தாமரைப் படை இந்த பாசிச திமுக அரசை வீழ்த்தியே தீரும் என்று அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ