Enter your Email Address to subscribe to our newsletters

கரூர், 12 ஜனவரி (ஹி.ச.)
தேனி வடக்கு மாவட்ட தமிழக வெற்றி கழகம் சார்பில் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் தேனி பங்களாமேடு பகுதியில் நடைபெற்றது.
இதில் த.வெ.க பரப்புரை செயலாளர் நாஞ்சில் சம்பத் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்
விழா மேடையில் பேசி நாஞ்சில் சம்பத் கூறுகையில்,
தமிழகத்தில் தவிர்க்க முடியாத சக்தியாக த.வெ.க கட்சி மாறியிருக்கிறது டெல்லி எஜமானர்களையும், செயின்ட் ஜார்ஜ் கோட்டை எஜமானர்களை கேள்வி கேட்கும் ஒரே தலைவர் இந்தியாவிலேயே விஜய் மட்டும் தான்.
தமிழகத்தில் ஒரு அரசியல் வெற்றிடம் உள்ளது அந்த வெற்றிடத்தை எங்கள் தலைவர் விஜய் நிரப்பி வருகிறார் விஜயின் விஸ்வரூபத்திற்கு முன்னால் பல கட்சிகள் வருகிற தேர்தலில் காணாமல் போகும்.
ஜனநாயகம் படத்தை உங்களால் தள்ளி தான் வைக்க முடியும் மக்களிடம் இருந்து தவிர்க்க முடியாது என்பதை நாங்கள் நிரூபித்து காட்டுவோம்.
லேப்டாப் கொடுத்தால் வெற்றி பெற்று விடலாம் என திமுக அரசு நினைக்கிறார்கள் ஆனால் லேப்டாப் பெற்ற மாணவர்கள் அதில் அனைவரும் விஜயின் படத்தை வைத்து விட்டார்கள்.
விஜய் முதலமைச்சரானல் 1000 ரூபாய் மகளிர் திட்டதை நிறுத்திவிடுவார் என கூறுகிறார்கள் ஒரு அரசின் திட்டம் நல்ல திட்டமாக இருந்தால் அதை எங்கள் அரசு மாற்றாது.
கரூர் சம்பவத்தில் விஜய் அங்கிருந்து புறப்பட்டு சென்றது தான் புத்திசாலித்தனம் அவர் அங்கேயே இருந்தால் அவரைப் பார்ப்பதற்கு பல லட்சம் மக்கள் கூடுவார்கள் மேலும் கூட்டம் கூடி இழப்பு 81 ஆக அதிகரித்து இருக்கும்.
நிலைமை மோசமாகி விடக்கூடாது என்று அங்கு இருந்து புறப்பட்டு விட்டார் என தெரிவித்தார்.
Hindusthan Samachar / Durai.J