பாமக விருப்பமான விநியோகம்:- அவகாசத்தை நீட்டித்துள்ள நிறுவனர் ராமதாஸ்
தமிழ்நாடு, 12 ஜனவரி (ஹி.ச.) தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை விரைவுப்படுத்தியுள்ளன. அந்த வகையில் இரண்டாக பிளவுப்பட்டுள்ள பாட்டாளி மக்கள் கட்சியிலும் அன்புமணி தரப்பும் ராமதாஸ் தரப்பும் போட்டி போட்டுக் கண்டு தேர்தல்
ராமதாஸ்


தமிழ்நாடு, 12 ஜனவரி (ஹி.ச.)

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை விரைவுப்படுத்தியுள்ளன. அந்த வகையில் இரண்டாக பிளவுப்பட்டுள்ள பாட்டாளி மக்கள் கட்சியிலும் அன்புமணி தரப்பும் ராமதாஸ் தரப்பும் போட்டி போட்டுக் கண்டு

தேர்தல் பணிகளை செய்து வருகின்றன.

அன்புமணி தரப்பு விருப்பமான விநியோகத்தை நிறைவு செய்துள்ள நிலையில்,

ராமதாஸ் தரப்பு சார்பில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விருப்பம் உள்ளவர்களிடம் கடந்த 9ஆம் தேதி முதல் விருப்ப மனு பெற்று வந்த நிலையில் இன்று கடைசி நாள் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் அவரது கோரிக்கையை ஏற்று, மேலும் கூடுதலாக இரண்டு நாட்கள் அவகாசம் வழங்கி

பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

முதல் நாளில் 2000 விருப்ப மனுக்கள் பெற்ற நிலையில், நேற்று வரை 3100 விருப்பம்

மனுக்கள் பெறப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / GOKILA arumugam