Enter your Email Address to subscribe to our newsletters

திருவண்ணாமலை, 12 ஜனவரி (ஹி.ச.)
ஆரணி அடுத்த சேவூர் ஊராட்சிக்கு உட்பட்ட புது தெரு பகுதியில் சுமார் 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
மேலும் இப்பகுதியில் என்ஆர்ஜிஎஸ் திட்டத்தின் கீழ் சிமெண்ட் சாலை மற்றும் பக்க கால்வாய் அமைக்கும் பணிகளை
திமுகவைச் சேர்ந்த ஒப்பந்ததாரர் ஒப்பந்தம் எடுத்து செய்ததாக கூறப்படுகிறது.
பின்னர் திடீரென திமுக ஒப்பந்ததாரர் இப்பணியை நிறுத்திவிட்டு சென்றதால்
இது குறித்து அப்பகுதி மக்கள் திமுக ஒப்பந்ததாரரிடம் கேள்வி எழுப்பி உள்ளனர்.
அதற்கு அவர் முறையாக பதில் அளிக்காததால் ஆத்திரமடைந்த அப்பகுதி
50-க்கும் மேற்பட்டோர்கள்
ஆரணி புறவழிச்சாலை இராட்டிணமங்கலம் பகுதியில் தீடிரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
பின்னர் தகவல் அறிந்து வந்த டிஎஸ்பி சுரேஷ்சண்முகம் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்தில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
அப்போது அப்பகுதி மக்கள் நாங்கள் கடந்த ஐந்து ஆண்டுகளாக உங்களுடன் ஸ்டாலின், கிராம சபை கூட்டம், ஆகிய இடங்களில் அதிகாரியிடம்,
சாலை மற்றும் பக்க கால்வாய் கேட்டு மனு அளித்தும் அதிகாரிகள் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தற்போது இந்த பணி திமுக ஒப்பந்ததாரர் எடுத்து பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஒப்பந்ததாரிடம் கேட்டு பதிலளிக்கவில்லை என்று கூறினர்.
அப்போது ஆரணி டிஎஸ்பி சுரேஷ்சண்முகம் போராட்டம் நடத்தினால் உங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என்று மிரட்டல் விடுக்கும் விதமாக பேசியதால் பெண்கள் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
விடியாத திமுக ஆட்சியில் பொதுமக்கள் அடிப்படை தேவைகளுக்கும் ரோட்டில் இறங்கி போராடும் அவல நிலை ஏற்பட்டுள்ளதாகவும் ஏவல்துறையினர் ஆளுங்கட்சியினருக்கு சாதகமாக செயல்பட்டு பொதுமக்களை மிரட்டி வருவதாகவும் மக்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.
Hindusthan Samachar / Durai.J