சபரிமலை ஐயப்பனுக்காக புறப்பட்ட ஆபரண பெட்டி
சபரிமலை, 12 ஜனவரி (ஹி.ச.) கார்த்திகை மாதம் தொடங்கி தற்போது வரை ஐயப்ப பக்தர்கள் மாலை அணிவித்து விரதம் கடைப்பிடித்து சபரிமலைக்கு சென்று நீண்ட நேரம் காத்திருந்து ஐயப்பனை தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில், சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகரஜோதி வி
சபரிமலை


சபரிமலை, 12 ஜனவரி (ஹி.ச.)

கார்த்திகை மாதம் தொடங்கி தற்போது வரை ஐயப்ப பக்தர்கள் மாலை அணிவித்து விரதம் கடைப்பிடித்து சபரிமலைக்கு சென்று நீண்ட நேரம் காத்திருந்து ஐயப்பனை தரிசனம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகரஜோதி விழா வரும் 14ஆம் தேதி வெகு விமர்சையாக கொண்டாடப்பட்ட உள்ளது.

அன்றைய தினம் ஐயப்பன் பொன்னம்பலம்மேடு பகுதியில் மூன்று முறை ஜோதியாக காட்சி தருவார் என பக்தர்களால் நம்பப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் மகரஜோதி பூஜைக்காக ஒவ்வொரு ஆண்டும் ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும்

தங்க ஆபரணங்கள் அடங்கிய பெட்டி, பந்தள ராஜா அரண்மனையில் இருந்து ஊர்வலமாக செல்ல துவங்கியுள்ளது .

இன்று(ஜன.12) அதிகாலையில் பந்தளம் வலியக்கல் கோவில் பகுதியில் பக்தர்களின் தரிசனத்திற்காக

வைக்கப்பட்ட ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் ஆபரணங்கள் பக்தர்களின் பார்வைக்காக வைக்கப்பட்டது.

இந்த ஆபரணங்களை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலில் குவிந்திருந்தனர். பக்தர்களின் தரிசனத்துக்கு பிறகு திருவாபரன பரணி துவங்கியது.

இந்தப் பெட்டி ஜனவரி 14 ஆம் தேதி சபரிமலை ஐயப்பன் சன்னதிக்கு கொண்டு

செல்லப்பட்டு அங்கே ஐயப்பனுக்கு தங்க ஆபரணங்கள் அணிவிக்கப்பட்ட பின்னர்

சபரிமலையில் ஐயப்பன் ஜோதியாக காட்சி தருவார்.

Hindusthan Samachar / GOKILA arumugam