கூட்டணி அதிகாரம் முடிவு எடுப்பது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மட்டுமே - காங்கிரஸ் மாநில தலைவர் செல்வபெருந்தகை
சென்னை, 12 ஜனவரி (ஹி.ச.) தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் அசீனா சையது தலைமையில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வில் கட்சியின் மாநில தலைவர் செல்வபெருந்தகை கலந்து கொண்டார். அதேபோல் பிரியங்கா கா
Selva


சென்னை, 12 ஜனவரி (ஹி.ச.)

தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் அசீனா சையது தலைமையில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

இந்த நிகழ்வில் கட்சியின் மாநில தலைவர் செல்வபெருந்தகை கலந்து கொண்டார்.

அதேபோல் பிரியங்கா காந்தி 54 வது பிறந்தநாள் ஒட்டி மகளிர் காங்கிரஸ் சார்பாக கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.

இந்த நிகழ்வில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய செல்வ பெருந்தகை,

ராகுல் காந்தி நாளை ஒரு பள்ளியின் நூற்றாண்டு விழா நிகழ்வுக்காக கூடலூர் வருகிறார்.

இதற்காக நான் உட்பட நிர்வாகிகள் வரவேற்கவும் அந்த பணிகளை திட்டமிட்டு வருவதாகவும், இந்த ஆண்டு மகத்தான பொங்கலாக மக்களுக்கு மாற வேண்டும் என்றார்.

ஆட்சி அதிகாரத்தில் பங்கு இல்லை என திமுக அமைச்சர் ஐ.பெரியசாமி பேசியது தொடர்பாக பதில் அளித்த அவர்,

கூட்டணி தொடர்பாக அவருடைய கருத்தை தான் அமைச்சர் பெரியசாமி பேசி இருக்கிறார்.

ஆனால் கூட்டணிக்கு தலைமை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மட்டுமே.

என முதலமைச்சரிடம் தான் அனைத்து முடிவுகளும் எடுப்பார் என தெரிவித்தார்.

த.வெ.க தலைவர் விஜய் சி.பி.ஐ வலையில் சிக்கி இருக்கிறார் என்றும், சிங்கம் வாயில் தானாக மாட்டிக்கொண்ட கதை சொல்வார்கள் அதுப்போல் தமிழக அரசு சிறப்பாக விசாரணை மேற்கொண்டு வந்தது இதில் மிரட்டல்கள் எதுவும் வரபோவதில்லை,நியாயமான விசாரணை நடந்து இருக்கும் சிபிஐ விசாரணை என பாஜக தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் வைத்து கொண்டு அனைவரையும் துன்புறுத்தி தற்போது விஜயை சென்னையில் இருந்து டெல்லிக்கு அழைத்து இருக்கிறது.

பாஜகவின் இது போன்ற அரசியல் ஒப்பந்தத்திற்காக முயற்சியை செய்கிறார்கள் ஒருபோதும் பாஜகவின் முயற்சி வெற்றி பெறாது

பல மாநிலத்தில்

பா.ஜ.க வுக்கு ஆதரவு தெரிவித்துவிட்டால் அவர்களின் ஊழல் வழக்குகள் அனைத்தும் மாறிவிட்டு புண்ணியம் செய்ததுபோல் மாற்றிவிடுவதாக தெரிவித்தார்.

தேர்தலுக்கான ஆயத்த பணிகள் தொடர்பாக வரும் 18 அன்று டெல்லியில் ராகுல் தலைமையில் கூட்டம் நடக்கிறது.

தேர்தல் நேரத்தில் இது வழக்கமான பணிகள் என தெரிவித்தார்.

அதேபோல் பாரசக்தி திரைப்படம் தொடர்பாக பா.ஜ.க முன்னாள் தலைவர் அண்ணாமலை விமர்சித்தது தொடர்பாக பேசிய அவர்,

திரைப்படத்தில் காட்டி இருப்பது கடந்தகால வரலாறு அவ்வளவு தான்.

ஆனால் தேசிய கொடியை பல ஆண்டுகள் என 2002 வரை ஏற்றாமல் இருந்தது தான் பா.ஜ.க என குறிப்பிட்டு விமர்சித்தார்.

திருச்சி வேலுசாமி தொடர்ந்து பல கருத்தை விமர்சித்து தான் பேசி வருகிறார்.

அனால் காங்கிரஸ்

கட்சிக்குள் எதையும் பேசுவதில்லை. ஆனால் வெளியில் தான் தொடர்ந்து பேசு வருகிறார்.

இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கட்சியின் அகில இந்திய தலைமைக்கு தெரிவித்து இருப்பதாகவும் அவர்கள் முடிவு எடுப்பார்கள் என தெரிவித்தார்.

காங்கிரஸ் ஆட்சி தமிழகத்தில் அமையுமா என்ற கேள்வி கேட்டபோது, தற்போது நடப்பதே காங்கிரஸ் ஆட்சி தான் என பதில் அளித்தார்.

Hindusthan Samachar / Durai.J