போக்குவரத்து துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி
ஆரணி, 12 ஜனவரி (ஹி.ச.) ஆரணியில் போக்குவரத்து துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனத்தில் பேரணியாக சென்று பொதுமக்கள் இடையே விழிப்புணர் ஏற்படுத்தினர். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் வட்
பேரணி


ஆரணி, 12 ஜனவரி (ஹி.ச.)

ஆரணியில் போக்குவரத்து துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

இதில் ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனத்தில் பேரணியாக சென்று பொதுமக்கள் இடையே விழிப்புணர் ஏற்படுத்தினர்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் வட்டார போக்குவரத்து துறை சார்பில்

வட்டாரப் போக்குவரத்து அலுவலர் சிவகுமார் தலைமையில்

சாலை பாதுகாப்பு மாத விழா முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

இதில் ஆரணி டிஎஸ்பி சுரேஷ்சண்முகம் மற்றும் போலீசார் சமூக ஆர்வலர்கள் வாகன ஓட்டிகள் பலர் கலந்து கொண்டனர்.

இப்பேரணியில் ஆரணி வருவாய் கோட்டாட்சியர் சிவா கோடியா செட்டி தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து ஆரணி டவுன் முக்கிய வீதிகள் வழியாக பேரணியாக சென்று மீண்டும் நகர காவல் நிலையம் வந்தடைந்தனர்.

Hindusthan Samachar / Durai.J