மக்கள் மயக்கமடைந்து விழுந்த போதும் ஏன் நீங்கள் பேச்சை நிறுத்தவில்லை? -விஜயயிடம் சிபிஐ கேள்வி
புதுடெல்லி, 12 ஜனவரி (ஹி.ச.) தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ம் தேதி கரூரில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்து ச
விஜய்


புதுடெல்லி, 12 ஜனவரி (ஹி.ச.)

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ம் தேதி கரூரில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.

பலர் படுகாயமடைந்தனர்.

இது குறித்து வழக்குப் பதிவு செய்து சிபிஐ விசாரணை மேற் கொண்டு வருகிறது.

விசாரணையின் முக்கிய நடவடிக்கையாக, தவெக தலைவர் விஜயை

இன்று விசாரணைக்கு நேரில் ஆஜராக சம்மன் அனுப்பி இருந்தது.

அதன் அடிப்படையில், சென்னையில் இருந்து தனி விமானத்தில் விஜய் இன்று காலை டெல்லி சென்றார்.

பின்னர், சிபிஐ தலைமையகத்துக்குச் சென்று விசாரணையில் நேரில் ஆஜரானார்.

இந்த விசாரணையின் போது மூன்று முக்கிய கேள்விகளை சிபிஐ,

விஜய்யிடம் எழுப்பியதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த கேள்விகள் கடுமையானவை மற்றும் முக்கியமானவை என சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

முதல் கேள்வி,

நீங்கள் ஒரு திறந்த வாகனத்தில் நின்று கொண்டிருந்தீர்கள், கூட்டத்தில் மக்கள் மயங்கி விழுவது தெளிவாகத் தெரிந்தும், நீங்கள் உங்கள் பேச்சைத் தொடர்ந்தது ஏன்?

இரண்டாவது கேள்வி,

சிலர் மயங்கி விழுந்த போது, நீங்கள் கூட்டத்திற்குத் தண்ணீர் பாட்டில்களை விநியோகித்துக் கொண்டிருந்தீர்கள், அப்படியிருந்தும் இந்த விஷயத்தில் ஏன் எந்த உடனடி நடவடிக்கையும் எடுக்கவில்லை?

மூன்றாவது கேள்வி,

நீங்கள் ஏன் சரியான நேரத்தில் கூட்ட இடத்திற்கு வரவில்லை?

உங்கள் தாமதம் கூட்டத்தில் அமைதியின்மையையும் அழுத்தத்தையும் ஏற்படுத்தியது.

இது உங்கள் அரசியல் அதிகாரத்தைக் காட்டும் செயலா?

இவ்வாறு டெல்லி சிபிஐ தலைமை அலுவலகத்தில் விஜய்யிடம் இரவு 7 மணி வரை விசாரணை நடைபெற்றதாக தகவல் வெளியாகி உள்ளது.

Hindusthan Samachar / Durai.J