Enter your Email Address to subscribe to our newsletters

பீகார், 12 ஜனவரி (ஹி.ச.)
பீகார் மாநிலம் சரண் மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண் பட்டுல் (வயது 23)
இவருக்கும் உத்தரபிரதேச மாநிலம் பாலியா மாவட்டம் பர்சியா கிராமத்தை சேர்ந்த ரோகித் என்பவருக்கும் கடந்த ஆண்டு மே 8-ம் தேதி திருமணம் நடைபெற்றது.
திருமணத்திற்குப்பின் பட்டுல் தனது கணவருடன் பர்சியா கிராமத்தில் வசித்து வந்தார்.
இதனிடையே, பட்டுலுடம் கூடுதல் வரதட்சணை கேட்டு கணவன் ரோகித் அவரது தாயார் சந்திரவதி தேவி, ரோகித்தின் சக்தரி ரூபி தேவி, அவரது கணவன் என குடும்பத்தினர் அனைவரும் தொல்லை கொடுத்துள்ளனர்.
இந் நிலையில், கணவன் மற்றும் அவரின் குடும்பத்தினர் கூடுதல் வரதட்சணை கேட்டு தொடர்ந்து தொல்லை கொடுத்ததால் மிகுந்த மன உளைச்சல் அடைந்த பட்டுல் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
தகவலறிந்து சென்ற போலீசார், பட்டுலின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், பட்டுலின் மாமியார் சந்திரவதி தேவியை கைது செய்தனர்.
Hindusthan Samachar / Durai.J