பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாளை முதல் 5 நாட்கள் விடுமுறை அறிவிப்பு
சென்னை, 13 ஜனவரி (ஹி.ச.) தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை ஆண்டுதோறும் வெகுவிமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில் பொங்கல் பண்டிகை வரும் 15ஆம் தேதி தமிழகத்தில் கொண்டாடப்படுகிறது. பொதுவாக 4 நாட்கள் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படும்.14
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாளை முதல் 5 நாட்கள் விடுமுறை அறிவிப்பு


சென்னை, 13 ஜனவரி (ஹி.ச.)

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை ஆண்டுதோறும் வெகுவிமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம்.

அந்த வகையில் பொங்கல் பண்டிகை வரும் 15ஆம் தேதி தமிழகத்தில் கொண்டாடப்படுகிறது.

பொதுவாக 4 நாட்கள் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படும்.14 ஆம் தேதி போகி, 15 ஆம் தேதி தை பொங்கல், 16ஆம் தேதி மாட்டுப் பொங்கல், 17ஆம் தேதி காணும் பொங்கல் ஆகும். இந்த நிலையில் அனைத்து பள்ளிகளுக்கு 15 ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை விடுமுறை என ஏற்கெனவே தமிழக அரசு அறிவித்திருந்தது.

இந்த நிலையில் தற்போது 14 ஆம் தேதியான புதன்கிழமையும் போகியையொட்டி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது பொங்கலுக்கு 4 நாட்கள் விடுமுறை, 18ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் மொத்தம் 5 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

பொங்கல் பண்டிகைக்கு சென்னையில் இருந்து பல்வேறு இடங்களில் வசிக்கும் மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம்.

அதற்காக ஆண்டுதோறும் தமிழக அரசு சிறப்பு பேருந்துகளை இயக்கி வருகிறது.

Hindusthan Samachar / vidya.b