அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை ஜனவரி 17ல் தொடங்கி வைக்கிறேன் - முதல்வர் ஸ்டாலின்
சென்னை, 13 ஜனவரி (ஹி.ச.) அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியைத் தொடங்கி வைக்க ஜனவரி.17ல் நேரில் செல்கிறேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் இன்று (ஜனவரி 13) பதிவிட்டிருப்பதாவது, சாதி பேதமற்ற ச
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை ஜனவரி 17ல் தொடங்கி வைக்கிறேன் - முதல்வர் ஸ்டாலின்


அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை ஜனவரி 17ல் தொடங்கி வைக்கிறேன் - முதல்வர் ஸ்டாலின்


சென்னை, 13 ஜனவரி (ஹி.ச.)

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியைத் தொடங்கி வைக்க ஜனவரி.17ல் நேரில் செல்கிறேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் இன்று (ஜனவரி 13) பதிவிட்டிருப்பதாவது,

சாதி பேதமற்ற சமத்துவப் பொங்கல் தமிழ்நாடெங்கும் பொங்கட்டும்!

கழகத்தினர் பொங்கல் விழாக்கள், விளையாட்டுப் போட்டிகள், கோலப் போட்டிகளை எழுச்சியோடு நடத்திப் பரிசுகள் வழங்கிடுங்கள்.

நாளை சென்னை சங்கமம் 2026 கலைவிழாவைச் சென்னையில் தொடங்கி வைக்கிறேன். 17-ஆம் நாள் மதுரை அலங்காநல்லூரில் ஏறுதழுவுதல் போட்டிகளைத் தொடங்கி வைக்கவுள்ளேன்.

2026 பொங்கல் மகிழ்ச்சிப் பொங்கலாக, திராவிடப் பொங்கலாக, நமக்கு வெற்றிப் பொங்கலாகப் பொங்கட்டும்!

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Hindusthan Samachar / vidya.b