ஆக்லாந்து ஓபன்‌ டென்னிஸ்‌ இரட்டையர்‌ பிரிவு காலிறுதிக்கு இந்தியாவின்‌ பாம்ப்ரி, சுவீடனின்‌ கோரன்சன்‌ ஜோடி முன்னேற்றம்
ஆக்லாந்து, 13 ஜனவரி (ஹி.ச.) நியூசிலாந்தின்‌ ஆக்லாந்து நகரில்‌, ஏ.எஸ்‌.பி, கிளாசிக்‌ டென்னிஸ்‌ தொடர்‌ நடக்கிறது. இரட்டையர்‌ பிரிவு முதல்‌ சுற்றில்‌ இந்தியாவின்‌ யூகி பாம்ப்ரி, சுவீடனின்‌ கோரன்சன்‌ ஜோடி, ஆஸ்திரேலியாவின்‌ அஜீத்‌ ராய்‌, நெதர்லாந்தின்
ஆக்லாந்து ஓபன்‌ டென்னிஸ்‌ இரட்டையர்‌ பிரிவு காலிறுதிக்கு இந்தியாவின்‌ பாம்ப்ரி, சுவீடனின்‌ கோரன்சன்‌ ஜோடி முன்னேற்றம்


ஆக்லாந்து, 13 ஜனவரி (ஹி.ச.)

நியூசிலாந்தின்‌ ஆக்லாந்து நகரில்‌, ஏ.எஸ்‌.பி, கிளாசிக்‌ டென்னிஸ்‌ தொடர்‌ நடக்கிறது.

இரட்டையர்‌ பிரிவு முதல்‌ சுற்றில்‌ இந்தியாவின்‌ யூகி பாம்ப்ரி, சுவீடனின்‌ கோரன்சன்‌ ஜோடி, ஆஸ்திரேலியாவின்‌ அஜீத்‌ ராய்‌, நெதர்லாந்தின்‌ ஜீன்‌-ஜூலியன்‌ ரோஜர்‌ ஜோடியை சந்தித்தது.

முதல்‌ செட்டை 6-3 எனக்‌ கைப்பற்றிய இந்திய-சுவீடன்‌ ஜோடி, 2வது செட்டை 6-2 என தன்வசப்படுத்தியது.

ஒரு மணி நேரம்‌, 6 நிமிடம்‌ நீடித்த போட்டியில்‌ பாம்ப்ரி, கோரன்சன்‌ ஜோடி 6-4, 6-2 என்ற நேர்‌ செட்‌ கணக்கில்‌ வெற்றி பெற்று காலிறுதிக்குள்‌ நுழைந்தது.

Hindusthan Samachar / JANAKI RAM