பயனாளி போர்டல் மூலம் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் விடுபட்ட குடும்ப உறுப்பினர்களின் பெயரை சேர்ப்பது எப்படி?
சென்னை, 13 ஜனவரி (ஹி.ச.) மத்திய அரசு நாட்டு மக்களின் நலனுக்கான பல வித நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. அவற்றுள் குடும்பத்தின் சுகாதார பாதுகாப்பு, மூத்த குடிமக்களின் நலன் ஆகியவற்றை நோக்கமாக கொண்ட ஆயுஷ்மான் பாரத் திட்டம் ஒரு முக்கிய திட்டமாக
பயனாளி போர்டல் மூலம் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் விடுபட்ட குடும்ப உறுப்பினர்களின் பெயரை சேர்ப்பது எப்படி?


சென்னை, 13 ஜனவரி (ஹி.ச.)

மத்திய அரசு நாட்டு மக்களின் நலனுக்கான பல வித நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது.

அவற்றுள் குடும்பத்தின் சுகாதார பாதுகாப்பு, மூத்த குடிமக்களின் நலன் ஆகியவற்றை நோக்கமாக கொண்ட ஆயுஷ்மான் பாரத் திட்டம் ஒரு முக்கிய திட்டமாக் உள்ளது.

ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்ய யோஜனா திட்டத்தின் பயனாளிகள் அவ்வப்போது ஒரு குறிப்பிட்ட சிக்கலை எதிர்கொள்கிறார்கள்.

இந்தத் திட்டத்தின் தரவுத்தளத்தில் சில முக்கிய குடும்ப உறுப்பினர்களின் பெயர்கள் இருப்பதையும், ஆனால், குழந்தைகள் அல்லது புதிய உறுப்பினர்களின் பெயர்கள் விடுபட்டு போவதையும் அடிக்கடி காண முடிகின்றது. இது அவசரகாலத்தில் இந்த உறுப்பினர்கள் இலவச சிகிச்சை பெறுவதை கடினமாக்குகிறது.

இப்போது அரசாங்கம் இந்தப் பிரச்சினையைத் தீர்த்துள்ளது. பயனாளி போர்டல் மூலம் மக்கள் தாங்களாகவே பெயர்களைச் சேர்க்க தற்போது அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் குடும்ப உறுப்பினர்களைச் சேர்ப்பதற்கு இனி அரசு அலுவலகங்களுக்குச் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. இதை பயாணிகள் தாங்களாகவே செய்யலாம். இதற்கு தேவைப்படும் இரண்டு விஷயங்கள் - ஆதார் அட்டை மற்றும் ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்.

ஆயுஷ்மான் திட்டத்தின் பயனாளிகள் அவ்வப்போது தங்கள் குடும்ப உறுப்பினர்களின் பெயர்கள் பட்டியலில் இல்லை என்று புகார் கூறுகின்றனர். இதற்கு பல காரணங்கள் இருக்கலாம்.

- முதலாவதாக, ஆயுஷ்மான் பாரத் திட்டத்திற்கான ஆரம்ப தரவு 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் (SECC) அடிப்படையில் தொகுக்கப்பட்டது.

- இதில் பல புதிய குடும்ப உறுப்பினர்களின் பெயர்கள் அல்லது திருமணத்திற்குப் பிறகு இணைந்தவர்களின் பெயர்கள் இல்லை.

- மேலும், ரேஷன் கார்டு அல்லது ஆதார் அட்டையில் பெயர் வித்தியாசமாக எழுதப்பட்டிருந்தால், அமைப்பு அதை ஏற்காது.

- முக்கிய குடும்ப உறுப்பினரின் ஈ-கேஒய்சி முழுமையடையாவிட்டாலும் புதிய உறுப்பினர்களைச் சேர்க்கும்போது தொழில்நுட்ப சிக்கல்கள் எழுகின்றன.

குடும்ப உறுப்பினர்களின் பெயர்களை ஆயுஷ்மான் திட்டத்தில் எப்படி சேர்ப்பது?

ஒரு குடும்ப உறுப்பினரின் பெயர் ஆயுஷ்மான் அட்டையில் சேர்க்கப்படவில்லை என்றால், இந்த வழிமுறைகளைப் பின்பற்றி பெயர்களைச் சேர்க்கலாம்.

- முதலில், அதிகாரப்பூர்வ ஆயுஷ்மான் பாரத் போர்ட்டலுக்கு செல்லவும். உங்கள் மொபைல் எண் கொண்டு லாக் இன் செய்து ஓடிபி ஐ உள்ளிடவும்.

- லாக் இன் செய்த பிறகு, உங்கள் மாநிலம், திட்டம் மற்றும் மாவட்டத்தைத் தேர்ந்தெடுக்கவும்.

- அடுத்து, உங்கள் ரேஷன் கார்டு (குடும்ப ஐடி) அல்லது ஆதார் எண்ணைப் பயன்படுத்தி உங்கள் குடும்ப விவரங்களைத் தேட வேண்டும்.

- விவரங்களைப் பெற்ற பிறகு, ஆட் மெம்பர் (Add Member) விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.

- அதைக் கிளிக் செய்யவும். பின்னர், நீங்கள் சேர்க்க விரும்பும் உறுப்பினரின் ஆதார் எண்ணை உள்ளிட்டு, ஆதார் ஓடிபி ஐப் பயன்படுத்தி அதைச் சரிபார்க்கவும்.

- இங்கே, அந்த உறுப்பினரின் புகைப்படம் மற்றும் பிற தேவையான தகவல்களை நிரப்ப வேண்டும்.

- விண்ணப்பிக்கும் போது இந்தத் தேவையான ஆவணங்களை உங்களுடன் இருக்க வேண்டும்.

- உறுப்பினருடனான உங்கள் உறவை நிரூபிக்க உங்கள் ரேஷன் கார்டு, பிறப்புச் சான்றிதழ் அல்லது திருமணச் சான்றிதழின் ஸ்கேன் செய்யப்பட்ட நகலை பதிவேற்றவும்.

- பின்னர் உங்கள் விண்ணப்பத்தைச் சமர்ப்பிப்பதற்கான விருப்பம் தோன்றும், மேலும் திரையில் ஒரு குறிப்பு ஐடி உருவாக்கப்படும்.

குறிப்பு ஐடியை பத்திரமாக வைத்திருங்கள்

குறிப்பு ஐடி மிகவும் முக்கியமானது. ஏனெனில் இது உங்கள் விண்ணப்பத்தின் நிலையைக் கண்காணிக்க உங்களை அனுமதிக்கிறது.

விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டால், திருத்தத்திற்கும் இந்த ஐடி தேவைப்படும். பொதுவாக 7 முதல் 15 நாட்களுக்குள், சரிபார்ப்புக்குப் பிறகு புதிய பெயர் சேர்க்கப்படும்.

அதன் பிறகு நீங்கள் இந்த போர்ட்டலில் இருந்து ஆயுஷ்மான் கார்டைப் பதிவிறக்கம் செய்யலாம்.

Hindusthan Samachar / JANAKI RAM