Enter your Email Address to subscribe to our newsletters

தூத்துக்குடி, 13 ஜனவரி (ஹி.ச.)
திருநங்கைகள் இச்சமூகத்தில் சந்திக்கும் எதிர்ப்புகளை மீறி, தங்களுடைய சொந்த முயற்சியில் படித்து, தனித்திறமைகளை கொண்டு பல்வேறு துறைகளில் முன்னேறி சாதனை படைத்த திருநங்கையரை கௌரவிக்கும் வகையில், மற்ற திருநங்கையர்களை ஊக்குவிக்கும் வகையில் திருநங்கைகள் தினம் என அறிவிக்கப்பட்ட ஏப்ரல் 15-ம் தேதியன்று திருநங்கைகள் நலனுக்காக சிறப்பாக சேவை புரிந்து அவர்களுள் முன்மாதிரியாக திகழும் திருநங்கைகளை சிறப்பிக்கும் வகையில் 2026-ஆம் ஆண்டுக்கான சிறந்த திருநங்கைக்கான விருது” தமிழ்நாடு முதலமைச்சரால் வழங்கப்படவுள்ளது. இவ்விருது பெறும் சாதனையாளருக்கு ரு. 1,00,000/-க்கான (ருபாய் ஒரு இலட்சம் மட்டும்) காசோலை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும்.
விதிமுறைகள்:திருநங்கைகள் அரசு உதவி பெறாமல் தானாக சுயமாக வாழ்க்கையில் முன்னேறி இருத்தல் வேண்டும். குறைந்தது 5 திருநங்கைகளுக்காவது வாழ்க்கையில் முன்னேற உதவியிருக்க வேண்டும். தமிழ்நாடு திருநங்கைகள் நலவாரியத்தில் உறுப்பினராக இருத்தல் கூடாது.
மேற்படி, தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் பரிந்துரையுடன் வரப்பெற வேண்டும். மாநில அளவிலான உயர்மட்டக்குழு விண்ணப்பங்களை பரிசீலனை செய்ய, விருதுக்கு தகுதியான விண்ணப்பத்தார்ர் தங்களது கருத்துரு (விரிவான தன் விவர குறிப்பு, உரிய விவரங்கள் மற்றும் அதற்குரிய ஆவணங்கள்) அடங்கிய (Booklet 4) தமிழ் 2 மற்றும் ஆங்கிலத்தில் 2 புத்தக வடிவத்தில் தயாரிக்கப்பட்டு, பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் விண்ணப்பிக்க வேண்டும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தெரிவித்துள்ளார்.
எனவே, துாத்துக்குடி மாவட்டத்தில் திருநங்கைகள் நலனுக்காக சிறப்பாக சேவை புரிந்த திருநங்க்கைகள் https;//awards.tn.gov.in என்ற இணையதளம் மூலமாக 18.02.2026-க்குள் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும் எனவும் உரிய காலத்திற்குள் பெறப்படாத விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும் எனவும் விருது பெறத் தகுதியுள்ளவர் இதற்கான அரசால் நியமிக்கப்பட்ட தேர்வு குழுவால் தெரிவு செய்யப்படுவார்.
தொடர்புகொள்ள வேண்டிய முகவரி:-மாவட்ட சமூகநல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், கோரம்பள்ளம், தூத்துக்குடி-628101 என மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / vidya.b