Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 13 ஜனவரி (ஹி.ச.)
பொங்கல் விற்பனைக்காக காலாவதியான மதுபாட்டில்களை விற்பதாக தகவல் வெளியாகியுள்ளது. திமுக அரசின் இந்தச் செயல்பாடு, வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என தமிழக பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,
கோயம்புத்தூரில், பொங்கல் பண்டிகை விற்பனைக்காக, தேதி காலாவதியான மதுவை டாஸ்மாக் கடைகளில் விற்பனைக்கு திமுக அரசு வைத்திருப்பதாக தனியார் நாளிதழில் செய்தி வெளியிட்டுள்ளது.
பொதுமக்களின் உயிர், உடல்நலம், குறித்து சிறிதளவும் அக்கறை இல்லாமல், வருமானம் வந்தால் போதும் என்ற ஒரே நோக்கம் கொண்ட திமுக அரசின் இந்தச் செயல்பாடு, வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
மது விற்பனை மூலமாக பல ஆயிரக்கணக்கான கோடிகள் வருவாய் ஈட்டும் திமுக அரசு, குறைந்தபட்சம், விற்பனை செய்யும் மதுவின் தரத்தைக் கூடப் பாதுகாக்கத் தவறுவது, திட்டமிட்ட குற்றம்.
காலாவதியான மதுவை விற்பதால் பாதிக்கப்படுவது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குடும்பமோ, அல்லது திமுக அமைச்சர்கள் குடும்பமோ அல்ல, அப்பாவி பொதுமக்களும், அவர்களது குடும்பங்களும் மட்டுமே.
பொதுமக்களின் உயிரை வைத்து வருமானம் ஈட்ட முதலமைச்சருக்கு அருவருப்பாக இல்லையா? என்று அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ