மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளுக்குள் பெய்த மழையின் காரணமாக குற்றால  அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு - குற்றாலம் மெயின் அருவியில் குளிக்க  தடைவிதிப்பு
சென்னை, 13 ஜனவரி (ஹி.ச) தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளுக்குள் இரவு பெய்த மழையின் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து சற்று அதிகரித்து காணப்பட்டு வரு
Cutralam


சென்னை, 13 ஜனவரி (ஹி.ச)

தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்

பகுதிகளுக்குள் இரவு பெய்த மழையின் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில்

உள்ள குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து சற்று அதிகரித்து காணப்பட்டு வருகிறது.

இதன் காரணமாக, பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குற்றாலம் மெயின்

அருவியில் தற்போது சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடையானது விதிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்பட்டு வருவதன் காரணமாக இந்த

தடையானது விதிக்கப்பட்டுள்ளதாகவும் மழை குறைந்து அருவிகளில் தண்ணீர் வரத்து

குறைந்தவுடன் வழக்கம்போல் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்படும்

எனவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Hindusthan Samachar / GOKILA arumugam