1 ஏப்ரல்‌ 2025 முதல்‌ 11 ஜனவரி 2026 வரை‌ நாட்டின்‌ நிகர நேரடி வரி வசூல்‌ 8.82 சதவீதம்‌ அதிகரித்து ரூ.18.38 லட்சம்‌ கோடியை எட்டியது - வருமான வரித்துறை தகவல்
புதுடெல்லி, 13 ஜனவரி (ஹி.ச.) ஏப்ரல்‌ 1 2025 முதல்‌ ஜனவரி 11 2026, வரையிலான காலகட்டத்தில்‌ நாட்டின்‌ நிகர நேரடி வரி வசூல்‌ 8.82 சதவீதம்‌ அதிகரித்து ரூ.18.38 லட்சம்‌ கோடியை எட்டியுள்ளது. இது குறித்து வருமான வரித்துறை தெரிவித்துள்ளதாவது: நேரடி வரி
1 ஏப்ரல்‌ 2025 முதல்‌ 11 ஜனவரி 2026 வரை‌ நாட்டின்‌ நிகர நேரடி வரி வசூல்‌ 8.82 சதவீதம்‌ அதிகரித்து ரூ.18.38 லட்சம்‌ கோடியை எட்டியது - வருமான வரித்துறை தகவல்


புதுடெல்லி, 13 ஜனவரி (ஹி.ச.)

ஏப்ரல்‌ 1 2025 முதல்‌ ஜனவரி 11 2026, வரையிலான காலகட்டத்தில்‌ நாட்டின்‌ நிகர நேரடி வரி வசூல்‌ 8.82 சதவீதம்‌ அதிகரித்து ரூ.18.38 லட்சம்‌ கோடியை எட்டியுள்ளது.

இது குறித்து வருமான வரித்துறை தெரிவித்துள்ளதாவது:

நேரடி வரி வசூல்‌ 8.82 சதவீதம்‌ உயர்ந்து ரூ.18.38 லட்சம்‌ கோடியாக அதிகரித்துள்ளது.

நடப்பு நிதியாண்டில்‌ (2025-26), ஏப்ரல்‌ 1 முதல்‌ ஜனவரி 11, 2026 வரையிலான காலகட்டத்தில்‌, இந்தியாவின்‌ நிகர நேரடி வரி வசூல்‌ 8.82% அதிகரித்து ரூ.18.38 லட்சம்‌ கோடிக்கு மேல்‌ எட்டியுள்ளது.

இந்த மொத்த வசூலில்‌, வரி செலுத்துவோரின்‌ பங்களிப்பு பின்வருமாறு:

கார்ப்பரேட்‌ வரி ரூ.8.63 லட்சம்‌ கோடிக்கு மேல்‌

தனி நபர்‌ வரி ரூ.9.30 லட்சம்‌ கோடிக்கு மேல்‌

பத்திரங்கள்‌ பரிவர்த்தனை வரி ரூ.44,867 கோடி

நிகர வரி வசூல்‌ அதிகரித்ததற்கு முக்கிய காரணம்‌, முந்தைய ஆண்டை விட வரி திரும்பப்‌ பெறுதல்‌ 17 சதவீதம்‌ குறைந்து, இக்காலகட்டத்தில்‌ ரூ.312 லட்சம்‌ கோடி மட்டுமே திரும்ப வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

Hindusthan Samachar / JANAKI RAM