Enter your Email Address to subscribe to our newsletters

கள்ளக்குறிச்சி, 13 ஜனவரி (ஹி.ச.)
கள்ளக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த 32 வயது பெண், இவருடைய கணவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருவதாக தெரிகிறது.
இந்த நிலையில் கடந்த ஓராண்டுக்கு முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது அந்த பெண்ணுக்கும் கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தில் பணிபுரிய முதல் நிலை காவலராக பணியாற்றி வரும் உளுந்தூர்பேட்டை அருகே பாளையம் குஞ்சரம் கிராமத்தைச் சேர்ந்த ஷேக் சலீம் என்பவருக்கும் அறிமுகமாகி பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இருவரும் செல்போன் எண்ணை பரிமாறிக் கொண்ட நிலையில் அவ்வப்போது செல்போனில் பேசி வந்துள்ளனர்.
இந்த நிலையில் மாலையில் போதையில் இருந்த ஷேக் சலீம் அந்த பெண்ணின் வீட்டிற்குச் சென்றுள்ளார். தொடர்ந்து போதையில் இருந்த ஷேக் சலீம் அந்த பெண்ணுக்கு வலுக்கட்டாயமாக பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது.
இதையடுத்து அந்த பெண் சத்தம் போடவே அங்கிருந்து ஷேக் சலீம் ஓடியதாக கூறப்படுகிறது. இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண், மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு அவரை கைது செய்தனர்.
மேலும் போதையில் முதல் நிலைக் காவலர் பெண்ணுக்கு பாலில் தொல்லை கொடுத்ததால் ஷேக் சலிம்மை துறை ரீதியாக பணியிட நீக்கம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டார்.
Hindusthan Samachar / ANANDHAN