மாதம்பட்டி ரங்கராஜ் விவகாரத்தில், பாகசாலா நிறுவனத்தை இணைத்து பதிவிட்ட பதிவுகளை நீக்கி விடுகிறேன் - ஜாய் கிரிசில்டா
சென்னை, 13 ஜனவரி (ஹி.ச) மாதம்பட்டி ரங்கராஜ் விவகாரத்தில், மாதம்பட்டி பாகசாலா நிறுவனத்தை இணைத்து பதிவிட்ட பதிவுகளை நீக்கி விடுகிறேன் என சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாய் கிரிசில்டா தரப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது. ரங்கராஜுக்கு எதிரான பதிவுகளில
Rangaraj


சென்னை, 13 ஜனவரி (ஹி.ச)

மாதம்பட்டி ரங்கராஜ் விவகாரத்தில், மாதம்பட்டி பாகசாலா நிறுவனத்தை இணைத்து பதிவிட்ட பதிவுகளை நீக்கி விடுகிறேன் என சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாய் கிரிசில்டா தரப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது.

ரங்கராஜுக்கு எதிரான பதிவுகளில், தேவையில்லாமல், தங்கள் நிறுவனத்தின் பெயரை இணைத்ததால், நிறுவனத்திற்கு பெறும் நிதி இழப்பு ஏற்பட்டுள்ளது என நிறுவனம் தரப்பு தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் மாதம்பட்டி பாகசாலா நிறுவனத்தை இணைத்து பதிவிட்ட பதிவுகளை நீக்கி விடுகிறேன் என ஜாய் கிரிசில்டா தரப்பில் தெரிவித்துள்ளது.

ரங்கராஜ் விவகாரத்தில் தங்கள் நிறுவனத்தை தொடர்புபடுத்தி ஜாய் கிரிசில்டா சமூக வலைதளங்களில் கருத்துக்கள் பதிவிட்டதற்கு எதிராக மாதம்பட்டி பாகசாலா நிறுவனம் தொடர்ந்த வழக்கு முடித்துவைக்கப்பட்டது.

Hindusthan Samachar / P YUVARAJ