Enter your Email Address to subscribe to our newsletters

மயிலாடுதுறை, 13 ஜனவரி (ஹி.ச.)
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை பேருந்து நிலையம் பின்புறம் தனியார் வணிக வளாகம் அமைந்துள்ளது. இங்கு வட மாநிலத்தைச் சேர்ந்த சுகாஷ் என்பவருக்கு சொந்தமான தங்க நகை சுத்திகரிப்பு மற்றும் பரிசோதனை நிலையம் இயங்கி வருகிறது.
மயிலாடுதுறையில் உள்ள பிரபல நகைக்கடையில் இருந்து நேற்று சிறு சிறு நகைகள் கொண்டுவரப்பட்டு உருக்கி ஒரே கட்டியாக செய்யப்பட்டுள்ளது.
இதனை சுத்தம் செய்து, எடை போடும்படி பணியில் இருந்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சார்ந்த 16 வயது சிறுவன் ஒருவனிடம் கடை முதலாளி தெரிவித்துள்ளார்.
தங்கக் கட்டியை துடைப்பது போல் பாவனை செய்த சிறுவன், கண்ணிமைக்கும் நேரத்தில் தங்க கட்டியை தூக்கிக் கொண்டு ஓடிவிட்டான். இது குறித்து காவல் துறையில் புகார் தெரிவிக்கப்பட்டதை அடுத்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு ஸ்டாலின் சம்பவ இடத்தை பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து சிறப்பு புலனாய்வு காவல்துறையினர் நடத்திய தேடுதல் வேட்டையில், சிறுவன் கைது செய்யப்பட்டு ரெண்டு கோடி மதிப்புள்ள ஆன ஒன்றை கிலோ எடை கொண்ட தங்க கட்டி பறிமுதல் செய்யப்பட்டது.
சிறுவன், குழந்தைகளுக்கான நீதிமன்ற குழு முன்பு ஆஜர் படுத்தப்பட்டு, தஞ்சையில் உள்ள சிறுவர்கள் கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டான்.
Hindusthan Samachar / ANANDHAN