Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 13 ஜனவரி (ஹி.ச)
சென்னை ஓட்டேரி செல்லப்பா தெருவில் சிங்கார சென்னை 2.0 திட்ட நிதியின் கீழ் ரூபாய் 4 கோடியே 58 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட உள்ள சென்னை மாநகராட்சி தொடக்கப்பள்ளி கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
இதில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு கலந்துகொண்டு மாநகராட்சி தொடக்கப்பள்ளி கட்டிடத்திற்கான அடிக்கல்லை நாட்டினார். உடன் மேயர் பிரியா, திரு.வி.க.நகர் சட்டமன்ற உறுப்பினர் தாயகம் கவி, உள்ளிட்டோர் இருந்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு பேசியதாவது,
திருப்பரங்குன்றம் விவகாரம் விவாதமாவதற்கு ஒரு காரணமும் இல்லை. இனத்தால், மதத்தால், மொழியால் மக்களை பாகுபடுத்த நினைக்கும் தீய சக்திகள் தான் காரணம்.
இந்த அரசை பொருத்தவரை சட்டத்தின் ஆட்சி நடத்துகிறது. சட்டத்தை யாரெல்லாம் கையில் எடுத்துக் கொள்ள நினைக்கிறார்களோ அவர்கள் மீது முதல்வரின் இரும்பு கரம் பாயும்.
அந்த வகையில் எச்.ராஜா சட்டத்தை கையில் எடுத்திருக்கிறார். அவரை காவல்துறை கைது செய்து இருக்கிறது.
மென்மையான போக்கை கடைபிடிப்பதால் சமாதானம் பேச நினைப்பதால் எச்.ராஜா யாரையும் கோழை என்று நினைக்க வேண்டாம்.
இஸ்லாமியர்களுக்கும், கிருத்துவர்களுக்கும் மதம் சாரந்த பிரச்சனையை கையில் எடுக்கும்போது சிறுபான்மையினரை அரவணைக்க வேண்டியது அரசு தான்.
இது எல்லோருக்கும் எல்லாமுமான அரசு. ஜாதி மத பேதம் என்பது கிடையாது. இந்து, இஸ்லாம், கிறிஸ்தவர் என அனைவரையும் ஒன்றாக பார்க்கிற அரசு.சட்டம் எங்கும் மீறப்பட்டாலும் அதன் மீது நடவடிக்கை எடுக்க அரசு தயங்காது என்றார்.
Hindusthan Samachar / P YUVARAJ