Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 13 ஜனவரி (ஹி.ச.)
சென்னை புரசைவாக்கம், கங்காதரேசுவரர் திருக்கோயிலில் தைப் பொங்கல் திருநாளை முன்னிட்டு சென்னை மண்டலங்களைச் சேர்ந்த 140 ஒருகால பூசைத் திட்ட திருக்கோயில்களின் இறைவன்.
இறைவிக்கு சாற்றுபடி செய்வதற்கு பருத்தி வேட்டி,புடவைககளை அர்ச்சகர்கள் மற்றும் பூசாரிகளிடம் அமைச்சர் சேகர்பாபு வழங்கினார்.
2025 - 2026 ஆம் நிதியாண்டிற்கான சட்டமன்ற மானியக் கோரிக்கையில்,
திருக்கோயில்களில் காணிக்கையாக பெறப்படும் உபரி பருத்தி புடவை மற்றும் வேட்டிகளை ஒருகாலபூசைத் திட்ட திருக்கோயில்கள், கிராமக்கோயில்கள். ஆதிதிராவிடர்/ பழங்குடியினர் வசிக்கும் பகுதியில் உள்ள திருக்கோயில்கள் உள்ளிட்ட திருக்கோயில்களுக்கு இறைவன்.
இறைவி திருவுருவங்களுக்கு சாற்றுப்படி செய்வதற்கு தேவையின் அடிப்படையில் ஆண்டுதோறும் தீபாவளி மற்றும் தைப்பொங்கல் திருநாளுக்கு முன்பாக வழங்கப்படும் OT GOT அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பினை நிறைவேற்றிடும் வகையில், கடந்த தீபாவளி பண்டிகையையொட்டி, தமிழ்நாடு முழுவதும் 96 பெரிய திருக்கோயில்களிலிருந்து பெறப்பட்ட 20,070 புடவைகளும் 6,525 வேட்டிகளும் 6,117 திருக்கோயில்களுக்கு வழங்கப்பட்டன.
அதனைத் தொடர்ந்து, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தைப் பொங்கல் திருநாளையொட்டி திருக்கோயில்களில் உபரியாக உள்ள பருத்தி புடவை மற்றும் வேட்டிகளை சென்னை மண்டலங்களைச் சேர்ந்த 140 ஒருகால பூசைத் திட்ட திருக்கோயில்களின் இறைவன். இறைவிக்கு சாற்றுபடி செய்வதற்கு அதன் அர்ச்சகர்கள் மற்றும் பூசாரிகளிடம் இன்று வழங்கினார்.
இத்திட்டத்தின் மூலம் தமிழ்நாடு முழுவதும் 6,500 திருக்கோயில்கள் பயன்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
Hindusthan Samachar / P YUVARAJ