சர்வம் ஏஐ நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் - அமைச்சர் டிஆர்பி ராஜா பேட்டி
சென்னை, 13 ஜனவரி (ஹி.ச.) சென்னை தலைமைச் செயலகத்தில் சர்வம் நிறுவனம் மற்றும் தமிழக அரசு கூடிய விரைவில் ஒரு செயற்கை நுண்ணறிவு தகவல் மையம் அமைப்பதற்கு பத்தாயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையொப்பமிட்டுள்ளது. இந்த திட
Trb rajq


சென்னை, 13 ஜனவரி (ஹி.ச.)

சென்னை தலைமைச் செயலகத்தில் சர்வம் நிறுவனம் மற்றும் தமிழக அரசு கூடிய விரைவில் ஒரு செயற்கை நுண்ணறிவு தகவல் மையம் அமைப்பதற்கு பத்தாயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையொப்பமிட்டுள்ளது.

இந்த திட்டத்தை குறித்து தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா மற்றும் ஐஐடி பல்கலைக்கழகத்தின் இயக்குனர் காமகோடி மற்றும் சர்வம் செயற்கை தொழில்நுட்ப நிறுவனத்தின் துணைத் தலைவர் ப்ரத்யூஸ் ஆகியோர்கள் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தனர்,

அமைச்சர் டி ஆர் பி ராஜாபேட்டியில்,

தலைமையில் ஒவ்வொரு நாளும் தமிழகம் புதிய திட்டங்களை உலகத்திற்கு ஒரு எடுத்துக்காட்டாக சாதித்து வருகிறது, உலகமே AI நோக்கி நகர்ந்து வருகிறது ,

மக்களிடையே ஏ ஐ மூலமாக எந்த விதமான பாதிப்புகள் பணிகளில் ஏற்படும் என்ற கவலை இருக்கும் முறையில் தற்போது வேலை வாய்ப்புகளுக்கு எந்த விதமான பதிப்புகள் இல்லாமல் தற்போது உள்ள வேலை வாய்ப்புகளை அடுத்த படிக்கு எடுத்து செல்லும் வகையில் விழிப்புணர்வு அளித்து வரும் வகையில் சர்வம் நிறுவனத்துடன் ஐஐடி இயக்குநர் காமகோடி மற்றும் துறை செயலாளர் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தம் கையொப்பம் இடப்பட்டுள்ளது.

இதற்கு 10 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு 1000 நபர்களுக்கு உயர் ஊதியம் வழங்கும் D TECH பணி வழங்கப்படும் , தமிழக மக்களுக்கு மிகவும் உதவி அளிக்கும் வகையில் இந்த திட்டம் செயல்படும்.

இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் இந்த திட்டம் தேவைபடும் அதிலும் இந்தியாவில் முதல் மாநிலமாக இந்த ஏ ஐ மையத்தினை கொண்டு வர உள்ளது , தமிழில் முதல் முறையாக ஏ ஐ தொழில்நுட்பம் உருவாக உள்ளது.

திராவிட மாடல் அரசு தொடர்ந்து ஆராய்ச்சியில் கவனம் செலுத்தி வருகிறது , உற்பத்தி மற்றும் சேவையில் முதன்மையாக தமிழகம் உள்ளது.

தமிழகத்திற்கு ஒரு செயற்கை தொழில்நுட்ப தரவு மையம் முக்கியமாக நம் மக்களின் தகவல் திருடப்படுவது தவிர்க்கப்படும் மேலும் தமிழகத்திற்கு என தனிப்பட்ட ஒரு தனி மையம் இயக்கப்படும் இதன் மூலம் பல்வேறு வகையிலான வேலை வாய்ப்புகள் உருவாக்க முடியும்.

GPU களுக்கான தட்டுபாடுகள் அதிகரித்து வருவதை உணர்த்து அதற்கான முன்னெடுப்பு பணிகளையும் மனதில் கொண்டுள்ளோம் , அதற்கு நல்ல முடிவு மிக விரைவில் எடுப்போம்.

அனைவரும் ஏ ஐ பயன்படுத்தி வருகிறோம் , நம் மூலமாக வெளிநாட்டு நிறுவனங்கள் வளர்ந்து வருகின்றது ,

இதனால் நம் வீட்டுக் குழந்தை முதலில் வளர்க்க முயற்சிப்போம்.

தமிழக warehouse policy போன்ற பல்வேறு துறைகளை சார்ந்த ஒரு திட்டம் வெளியிடப்படுகிறது அதனை தொடர்ந்து கழிவுகளை மறுசுழற்சி செய்ய ஒரு திட்டத்தினை முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் அவர்கள் வெளியிட்டனர். என்றார்.

காமகோடி பேட்டி,

விவசாயம் , மருத்துவம் மற்றும் பல்வேறு துறையில் AI தொழில்நுட்பத்தின் நல்ல தாக்கம் ஏற்படுத்தி வருகிறது.

தமிழகத்தில் data centre கட்டப்படுவதற்கு ஒரு ஒப்பந்தம் இடப்பட்டுள்ளது , ஒவ்வொரு துறையும் , தனியார் நிறுவனமும் தங்களின் தரவுகளை ஒரே பகுதியில் இணைத்து கொள்ளும் வகையில் அமைக்கப்படும் ஒரு மையமாக உள்ளது , திட்டங்களை அனைத்து மக்களையும் , நிறுவனங்களையும் ஒன்றிணைக்கும் ஒரு திட்டமாக இந்த திட்டம் உள்ளது.

பல்வேறு துறைகளில் ஏ.ஐ பயன்படுகிறது..

அவற்றை எல்லாம் ஒருங்கிணைக்கும் வகையில் தகவல்களை சேகரித்து.

அரசின் சார்பில் செயல்படுத்தப்படும் அனைத்து தரவுகளும் இதில் சேரும் , பல தரவுகளை சேர்த்து ஒரு கொள்கையை உருவாக்குகிறோம் இதற்கெல்லாம் இது பயனுள்ளதாக இருக்கும். என்றார்.

Hindusthan Samachar / P YUVARAJ